உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்: அமித்ஷா

டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், என டில்லி அரசு, போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.தலைநகர் டில்லியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ரேகா குப்தா, மாநில அமைச்சர் ஆஷிஸ், டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:எந்த பாரபட்சமும் இன்றி டில்லியில் செயல்படும் பல மாநில ரவுடிகளை ஒடுக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விவகாரத்தை கடுமையாக கையாள வேண்டும். அவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும்.சட்டவிரோதமாக ஊடுருவம் வங்கதேச மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களுக்கு உதவுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.2020 ல் டில்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க, டில்லி அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மழை காலங்களில் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதனை சரி செய்வதற்கான பணிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும்.போலீஸ் துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள், போலீஸ் ஸ்டேசன் சென்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் தலைமை செயலர் சந்தித்து அதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Karthik
மார் 01, 2025 07:35

அய்யோ அமித்ஷா.. அதிரடியா ஆரம்பிங்கையா.. இந்த கள்ளக் குடியேறிகளை உடனடியா மொத்தமா நாடுகடத்தனும் அமெரிக்கா போல..


Sivagiri
பிப் 28, 2025 22:06

ஹரியானா, பஞ்சாப், உபி, ஹிமாச்சல், அங்கே குற்றம் செய்து விட்டு ஒளிந்து கொள்ளும் இடமாக டில்லி உள்ளது, அதேபோல பங்களாதேஷ், பர்மா நேபாள், பாகிஸ்தான், நாட்டு குற்றவாளிகள் அகதிகள், தங்குதடையின்றி வசிக்கும் இடமாக டில்லி உள்ளது, பல மாநில கட்சி அலுவலகங்கள். விடுதிகள், தனியார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளின் விடுதிகள் புகலிடங்கள் . . . . தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து விடுகிறார்கள் . . .


Pandi Muni
பிப் 28, 2025 21:32

டெல்லில மட்டும் துரத்தினா போதுமா? இந்தியா முழுவதும் களையெடுக்க வேண்டியுள்ளது.


vadivelu
பிப் 28, 2025 21:26

ஆமாம், கெஜ்ரிவாலை முதல்வாராக வைத்து பா ஜா கா ஆட்சி செய்தது. தமிழ்நாட்டு ஊடகங்களை மட்டுமே பார்த்தால் அவ்வளவுதான் தெரிந்து இருக்கும்.


ManiK
பிப் 28, 2025 21:10

தைரியமாக சுத்தம் செய்யுங்கள். உங்களுடைய கடுமையான நடவடிக்கைகள் நிச்சயமாக இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டும். தேசபக்தி இல்லாத திமுக போன்ற கும்பல் கதறினாலும் பின்வாங்க கூடாது. ஜெய்ஹிந்த்.


Priyan Vadanad
பிப் 28, 2025 21:07

அதாவது, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ராக்களின் தெர்மல் சேவை முடிந்து விட்டது என்று அமித் ஷா சொல்கிறாரோ புரியவில்லை. நல்லது நடந்தால் சரிதான்.


தமிழன்
பிப் 28, 2025 21:00

எப்படி காலிலும் கையிலும் சங்கிலியை கட்டிதானே?? அங்கு இதே மாதிரி ஒரு பைத்தியக்காரன் மனதில் தோன்றுவதையெல்லாம் சட்டமாக்க முயற்சிக்கிறார் நேற்று கோர்ட்டால் சரியான செருப்படி கிடைத்தது அவருக்கு இங்கு எப்போதோ??


sankar
மார் 01, 2025 06:50

கற்பனையில் காலத்தை ஓட்டும் திராவிடியாஸ்


Rajagopalan Narasimhan
மார் 01, 2025 14:05

There should be something legal to differentiate ill legal immigrants to facilitate repatriation.


நிக்கோல்தாம்சன்
பிப் 28, 2025 20:46

தைரியம் இருந்தா செய்யுங்க , சத்தமில்லாத இன்வேஷன் நடந்து கொண்டுள்ளது , அவுரங்க ஷீப் இன் கொடுங்கோன்மை வேறு விதத்தில்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 20:46

கெஜ்ரி இருந்தபோது ஏன் வற்புறுத்தலை ?? Where had you have jerking off that time ??


vadivelu
பிப் 28, 2025 21:31

இப்பதான் சரியான சந்தர்ப்பம், அமெரிக்க நாடு கள்ள தனமாக குடியேறி அங்கே குற்றங்களையும் செய்து இருந்த அன்னியர்களை கையில் காலில் விலங்கிட்டு அனுப்பிய போது அதை உங்களை பார்க்க செய்ததே அதற்காகத்தான். நம்ம நாடே மரியாதையாக அழைத்து கொள்ள வேணும் என்று கூப்பாடு போட்டவர்கள் , இப்ப அப்படி நம்ம அண்டை நாடு அதிகாரிகளுக்கு வேண்டுதல் வைக்கணும்.இல்லை என்றால் அனுப்பி வைக்கும் போது கதற கூடாது


தமிழ்வேள்
பிப் 28, 2025 20:36

சார் ஜி, தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் கள்ள குடியேற்றம் அனைத்து திராவிட கட்சிகளின் ஒத்துழைப்போடு மிகவும் ஜோராக நடக்கிறது.. புற்றிலிருந்து எறும்புகள் வருவது போல தமிழகம் மூலமாக நடக்கும் கள்ள குடியேற்றம் ஜமாஅத் வகையறா சர்ச் கும்பல் மற்றும் பவுல் தினகரன் தொடர்பு உடைய இடங்கள் மூலம் அதிகம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம்...ஒரே நேரத்தில் தமிழகம் கேரளம் மற்றும் மேற்கு வங்காளத்திலும் சோதனைகள் நடத்தி பிடிபடுவோரை உடனடியாக இண்டி கும்பல் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அனுப்பி வழக்கையும் அங்கேயே நடத்துங்கள்.. அவர்களின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் மீது கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்..திமுக வகையறா வக்கீல்கள் அதிகம் பேர் ஆஜராகும் வாய்ப்பு உள்ளது


சமீபத்திய செய்தி