கொள்கை இல்லா கூட்டணி!
பீஹார் சட்டசபை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விட்ட நிலையிலும், யார் யார் எங்கு போட்டியிடுவது என்ற குழப்பம், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் நீடிக்கிறது. இக்கூட்டணிக்கு கொள்கையும் இல்லை; மக்கள் மீது நலனும் இல்லை. கொள்ளை அடிப்பதும், குடும்பத்தை காப்பாற்றுவதும் தான் ஒரே குறி. சஞ்சய் குமார் ஜா ராஜ்யசபா எம்.பி., - ஐக்கிய ஜனதா தளம்
ஒரே குழப்பமாக உள்ளது!
பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்பதை ஓரிடத்தில் கூட வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. காமராஜர் பல்கலையில், பி.எப்.சி., படித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது, தமிழ் பேசுபவர்களுக்கானது. அவரது வேட்புமனு ஒரே குழப்பமாக உள்ளது. பிரசாந்த் கிஷோர் தலைவர், ஜன் சுராஜ்நேருவே காரணம்!
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு காங்கிரசைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் நேருவே காரணம். மற்ற விவகாரங்களை போல, இந்த பிரச்னையையும் சமாளிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு, அவர் சுதந்திரம் வழங்கியிருந்தால் காஷ்மீர் பிரச்னை ஒருபோதும் எழுந்திருக்காது. ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,