உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீட் கிடைக்காததால் லாலு வீட்டின் முன் ஆடையை கிழித்து கதறி அழுத நிர்வாகி

சீட் கிடைக்காததால் லாலு வீட்டின் முன் ஆடையை கிழித்து கதறி அழுத நிர்வாகி

பாட்னா: பீஹா ர் சட்டசபை தேர்தலில், மதுபன் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் மதன் ஷா, 'சீட்' கிடைக்காத விரக்தியில், அக்கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் வீட்டின் முன், ஆடையை கிழித்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேட்புமனு தாக்கல் பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் நடக்க சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, 'மகாகத்பந்தன்' கூட்டணியில் தொகுதி பங்கீடே இறுதியாகாத போதும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கலை செய்து விட்டனர். கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மதுபன் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என, ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் மதன் ஷா மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார். இதற்காக, அவர் பணம் கொடுத்ததா கவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தொகுதி, அக்கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குஷ்வாஹாவுக்கு வழங்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த மதன் ஷா, சீட் கிடைக்காத விரக்தியில், பாட்னாவில் உள்ள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டின் முன், ஆடையை கிழித்து கதறி அழுது நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொ டர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மதுபன் தொகுதி மதன் ஷா கூறுகையில், “பணம் கொடுக்க மறுத்ததாலேயே மதுபன் தொகுதி எனக்கு வழங்கப்படவில்லை. ராஜ்ய சபா எம்.பி., சஞ்சய் யாதவ் பணத்தை வாங்கிக்கொண்டு, மதுபன் தொகுதியை சந்தோஷ் குஷ்வாஹாவுக் கு வழங்கி விட்டார். '' என்னைப் போன்ற கட்சியின் விசுவாசமான நபர்களுக்கு சீட் வழங்கப்படுவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கட்சி மேலிடம் முன்னுரிமை அளிக்கிறது,” என, கண்ணீர்மல்க கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
அக் 20, 2025 14:11

இவர்கள்தான் மக்களுக்கு நல்லது செய்ய போகிறார்கள். காலத்தின் கோலம்.


வாய்மையே வெல்லும்
அக் 20, 2025 11:55

அய்யகோ மக்களின் பணத்தை திருடுவதற்காக அரசியலில் குதித்தேன். ஆனால் கட்சி தலைவன் இரண்டரை கோடி கேட்டான், என்னால் புரட்டி குடுக்க முடியவில்லை. தலைவன் சீட் கொடுக்க மறுக்கிறான் ஆதலால் நான் மனம் நொந்து போயிட்டு இப்படி கதறி அழவேண்டிய நேரம் வந்துட்டு. இப்படிக்கு லாலு வீட்டின் முன்னே முண்டியடித்து அழும் .. வெட்கக்கேடு ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை