உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற 42 நீதிபதிகள் கிரங்க கடிதம்!

டில்லி போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற 42 நீதிபதிகள் கிரங்க கடிதம்!

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் டில்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், 'தேர்தல் கமிஷன் உட்பட தேசத்தின் அரசியல் சாசன அமைப்புகளை சீர்குலைக்க சதி நடக்கிறது' என, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 42 பேர் பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர். உள்நாட்டில் உள்ள அமைப்புகள் மட்டுமின்றி, வெளிநாட்டு அமைப்புகளும் இந்த சதியின் பின்னணியில் இருப்பதாகவும், இது நாட்டின் அரசியலமைப்புக்கு ஆபத்தாக முடியும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி உட்பட பல்வேறு விவகாரங்களில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், இதற்கு சக தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பலமுறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆங்கில நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தேர்தல் கமிஷன் மறுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t3wansvm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கிடையே 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, தரவுகளுடன் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தது. அதில், நாடு முழுதும் மூன்று கட்டங்களாக நடந்த எஸ்.ஐ.ஆர்., பணியில், 95.40 கோடி வாக்காளர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், உயிரிழந்தது, இடம் பெயர்ந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 13.39 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் உரிய தரவுகளுடன் விளக்கப்பட்டது. இந்நிலையில், 'தேர்தல் கமிஷன் உட்பட அரசியல் சாசன அமைப்புகளை சீர்குலைக்க வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உள்நாட்டில் உள்ள சில அமைப்புகள் சதி செய்து வருவதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் 42 பேர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேர்தல் கமிஷன் மற்றும் நீதித்துறையை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்படும் அவதுாறு பரப்புரைகளுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நம் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில், தேர்தல் கமிஷன் மற்றும் நீதித்துறை மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன், நீதித்துறை மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை குறிவைத்து தொடர்ந்து அவதுாறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, 'ஓட்டு திருட்டு' என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஆனால், அதற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படுவதில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உறுதிமொழி அளிக்கும்படி தேர்தல் கமிஷன் கோரினால், ஒருவரும் முன்வருவதில்லை.

விமர்சிக்கின்றனர்

மாறாக பொதுமேடைகளில் தேர்தல் கமிஷனர்கள் மீது குறைகூறுவதும், 'திருடர்கள்', 'சமரசம் செய்து கொண்டவர்கள்' எனவும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய மோசமான சூழலில், தொடர்ந்து மவுனம் காப்பது நடுநிலையான நிலைப்பாடாக இருக்காது. தேசத்தின் அரசியல் சாசன அமைப்புகள் மீது தொடர்ந்து அவதுாறு பரப்புவதும், தாக்குதல் நடத்துவதும் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேர்தல் கமிஷன் தான் தாக்குதலின் மையமாக இருக்கிறது. நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறையும் இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இது நியாயமான விமர்சனங்கள் அல்ல; அரசியல் ஆதாயம் தேடும் தீய சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படும் அவதுாறு பரப்புரையாக தோன்றுகிறது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை சீர்குலைக்கும் ஆபத்தும் தற்போது எழுந்துள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணி, சட்டப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். பிழை இல்லாத துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே அதன் இலக்கு. ஆனால், அதில் தவறு நடப்பதாக அவ்வப்போது ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஜனநாயகத்தின் நம்பிக்கையே நாணயம் தான். அந்த நாணயத்தை வலுவிழக்க வைக்கும் வகையில், ஓட்டுரிமையின் மீது தொடர்ச்சியாக அவநம்பிக்கையை விதைத்தால், அது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும். தேச விரோத மற்றும் குழப்பவாத சக்திகள் ஊடுருவ வழிவகுத்துவிடும். ஜனநாயகத்தில் விமர்சனங்களை முன்வைக்க உரிமை இருக்கிறது. அதற்காக அரசியல் சாசன அமைப்புகளை அவமதிக்க கூடாது. தேர்தலில் தோல்வியடைந்தால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் வெற்றி பெறும்போது மட்டும் எந்த கேள்வியும் எழுப்பப்படுவதில்லை.

சொந்தமானதல்ல

சில அமைப்புகள் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்கின்றன. ஆனால், போதுமான ஆதாரங்களை வழங்குவதில்லை. சாதகமாக தீர்ப்பு வராதபோது, நீதிமன்றத்தையே விமர்சிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அரசியல் சாசன அமைப்புகள் என்பது குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானது அல்ல; அது தேசத்தின் குடிமக்களுக்கு சொந்தமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வெளிப்படையாக எழுதப்பட்ட இந்த கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Raja Raja
அக் 10, 2026 20:33

கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டத்தை இது போல் முதலில் அடக்கியிருக்கவேண்டும் ,இந்த போராட்டத்தை அப்படியே விட்டால் புஷ்வானம் ஆகிவிடும் ,,தடை செய்ய செய்ய வளரும் ?


NBR
அக் 09, 2026 18:40

CENTRAL GOVERNMENT IS NOT ACTING FAST. It should have controlled long before.


Arul Narayanan
அக் 09, 2026 17:43

நீதிமன்றத்தில் விவகாரம் இருக்கும் போது போராட்டத்தை தடை செய்யக் கோரி இவர்களில் யாராவது ஒருவர் ஏன் நீதிமன்றத்தை அணுகக் கூடாது?


மொட்டை தாசன்...
அக் 09, 2026 14:41

நாட்டின் அரசியல் சாசனத்தின்மீது சேற்றைவாரி இறைக்கும் இந்த பொய் போராளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.


BALAKUMAR
அக் 09, 2026 14:17

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க வேண்டும். கரப்பான் பூச்சி இயக்கத்திற்கு எதிராக கரப்பான் பூச்சி கொல்லி மருந்து இயக்கம் ஆரம்பிக்க பட வேண்டும் . தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்களை ஒழிக்க வேண்டும்.


manian
அக் 09, 2026 13:32

This is the wise mature voice of the whole nation.You fight but keep the family intact.Vultures are waiting on the wings.


R.MURALIKRISHNAN
அக் 09, 2026 10:45

கரப்பான் என்ற தீய ஒழுக்கம் கெட்ட தீவிரவாத கும்பலின் இலக்குனராக ராகுல் செயல்படுகிறான். இந்த களவாணி கும்பலை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும்.


Lana
அக் 09, 2026 10:25

இறந்த வர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோர யார் அதிகாரம் அளித்தது முருகா. 4 இடங்களில் ஓட்டர் கார்டு வைத்து கொண்டு தேர்தல் ஐ குறைசொல்பவன் தானே நீங்கள்


KARUPPIAH RAMAKRISHNAN
அக் 09, 2026 08:26

கடிதம். உண்மை தான்


VENKATASUBRAMANIAN
அக் 09, 2026 07:59

இப்போது உள்ள நீதிபதிகள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு தன்னிச்சையாக ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை