உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலை ஒதுக்கி தள்ளிய அனந்தகுமார் ஹெக்டே

அரசியலை ஒதுக்கி தள்ளிய அனந்தகுமார் ஹெக்டே

பெங்களூரு: அரசியலை விட்டு ஒதுங்கிய பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, தற்போது கிரீன் நானோ டெக் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.உத்தரகன்னடா தொகுதியில் ஆறு முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றிருந்த அனந்த்குமார் ஹெக்டே, மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். 'ஹிந்துத்வா பயர் பிராண்ட்' என, பிரசித்தி பெற்றவர். பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்.

அரசியல் விரக்தி

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், சீட் பெற அதிகபட்சம் முயற்சித்தார். ஆனால் மேலிடம் இவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்தார். சில மாதங்களாக, அவர் அரசியலில் காணப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை.அரசியலை விட்டு ஒதுங்கியுள்ள அனந்த்குமார் ஹெக்டே, தற்போது கதம்பா நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, 'கிரீன் நானோ' என்ற பெயரில் தொழில் துவங்கி உள்ளார். இயற்கையான முறையில் ஆயுர்வேத அழகு சாதன பொருட்கள், பிஸ்கட், சாக்லேட், குக்கீஸ், ெஹர்பல் டீ காப்ஸ்யூல், ஐஸ்கிரீம் மிக்ஸ், எண்ணெய், நெய், கிருமி நாசினி, தலைமுடி ஆயில் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.கிரீன் நானோ தொழில்நுட்பம் மூலம், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை பயன்படுத்தி, மருந்துகள் தயாரிக்கிறார். பெங்களூரின் ஜெயநகர் 4வது பிளாக்கில், கதம்பா கிரீன் நானோ மருத்துவ மையத்தை, அனந்த்குமார் ஹெக்டே திறந்துள்ளார். ஏற்கனவே 100 க்கும் மேற்பட்ட மருந்துகளை தயாரித்துள்ளார்.

தொழில்நுட்பம்

இது குறித்து, கிரீன் நானோ தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் கட்டேஷ் கட்டி கூறியதாவது:முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, மருத்துவ துறையில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தி, பல்வேறு மருந்துகள் தயாராகின்றன. இது எதிர்கால தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.இதற்காக உலகின் முதல், 'பசுமை நானோ ரியாக்டர்' மையம் அமைத்துள்ளார். இங்கு மேம்படுத்தப்படும் மருந்துகள், சிக்கலான நோய்களை குணமாக்கும்.கடந்த 50 ஆண்டுகளில் மருத்துவ துறையில் நோய்களை கண்டுபிடிப்பதில் அற்புதமான சாதனைகள் நடந்துள்ளன. சிகிச்சை மற்றும் நோயை குணப்படுத்துவதில் சாதனை நடந்துள்ளது. ஆனால் இந்த சாதனை போதாது. தற்போது நானோ கிரீன் மருந்துகள் மூலம் புற்றுநோய், நீரிழிவு, தொற்று சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். இந்த மருந்துகளை சில விலங்குகள், நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்து, வெற்றி பெற்றுள்ளோம்.

நானோ மெடிசன்

தற்போதுள்ள நடைமுறையில் புற்றுநோய் சிகிச்சைக்கு, கீமோதெரபி, ரேடியோதெரபி செய்யும் போது, மொத்த உடலின் சக்தி குறையும். மருந்துகள் டியூமர் செல்லுக்கு பதிலாக, ரத்தம், ஆரோக்கியமான உயிரணுக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க 'நானோ மெடிசன்' உதவும்.தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை பயன்படுத்தும் நடைமுறை, அனைத்து விதமான மருந்துகளிலும் உள்ளது. இந்தியா, சீனா, எகிப்து என, பல நாடுகளில் தங்கத்தை பஸ்ம வடிவில் சிகிச்சைக்கு பயன்படுத்தினர். இவைகளுக்கு தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் என, பெயர்களும் உள்ளன. தற்போது நாங்களும் தங்கம் பயன்படுத்தி, நானோ கேர் மருந்துகளை தயாரிப்பதில் வெற்றி அடைந்துள்ளோம்.எந்த டாக்டராக இருந்தலும், நானோ மெடிசன் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெறலாம். டாக்டர்களின் எண்ணிக்கை அதிகமானால், மூன்று அல்லது நான்கு மாதங்கள் மருத்துவ கல்வி துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 07, 2025 12:08

அரசியலை விட்டு விலகியது சிறப்பான செயல். பிறகு தொழில் துவங்கி மருத்துவ ரீதியாக சாதிக்க முயல்படுவது, மக்களுக்கு உதவ முட்படுவது மிக மிக சிறந்த ஒரு செயல். வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை