உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா முதல் கும்பமேளா வரை : இந்தாண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்கள்

ஆந்திரா முதல் கும்பமேளா வரை : இந்தாண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஜனாதிபதி திரவுபதிமுர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்தாண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்களின் முக்கிய தொகுப்பு

கரூர் கூட்ட நெரிசல்

தவெக தலைவர் விஜய் அரசியல் சுற்றுபயணத்தில் கடந்த மாதம் 27 ம் கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

பெங்களூரு அணி கொண்டாட்டத்தில்

பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றது. இதனை கொண்டாடுவதற்காக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ல் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

கோவா

கோவா மாநிலத்தில் ஷிர்கோவான் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த மே மாதம் 3ம் தேதி ஏற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்தனர்.

டில்லி ரயில்வே நிலையம்

டில்லி ரயில் நிலையத்தில் கடந்த பிப்.,15 ல் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கும்பமேளா செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். இரண்டு நடைபாதைகளை இணைக்கும் நடைபாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்து 6 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

கும்பமேளாவில்

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளாவின் போது கடந்த ஜன.,29ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். புனித நீராடுவதற்காக ஏராளமானோர் ஒன்று கூடியதால் நெரிசல் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Venugopal S
நவ 02, 2025 07:32

ஒழுக்கம்,சுய கட்டுப்பாடு,விதிகளை மதித்து பின்பற்றுதல் போன்ற நல்ல பழக்கங்கள் இல்லாத கல்வியும் பக்தியும் பயனற்றவை!


Modisha
நவ 02, 2025 08:40

அதாவது , ஹிந்து மத பக்தி? மெக்கா கூட்ட நெரிசலில் கூட வருடாவருடம் இறக்கிறார்கள் .


Appan
நவ 02, 2025 06:34

இதற்கெல்லாம் மூலகாரணம் ஒழுங்கின்மை .. அதாவது எந்த சட்டங்களையும் பாதிப்பில்லை. இந்தியாவில் தான் நாட்டின் தேசியா கீதமான வந்தே மாதரம் படமாட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் அதை நாடு பொறுத்துக் கொண்டு இருக்கிறது. அன்றாட வாழ்விலும் -டிராபிக் சிக்னலை யாரும் மதிப்பது இல்லை. கியூவில் யாரும் நிற்பதில்லை ..மதம் மொழி, கலாச்சாரம் என்று சொல்லி யாரும் ஏதும் செய்யலாம். இந்திய அளவில் சட்டங்கள் தான் முதன்மை என்று ஆட்சி நடக்கணும். இவ்வளவு மக்கள் தொகை உள்ள நாட்டில் order, disipline இல்லை என்றால் நாடு அழிந்தும் விடும். இதன் அறிகுறிகள் தான் இந்த நெரிசல் சாவுகள்.


நிக்கோல்தாம்சன்
நவ 02, 2025 07:41

சுய ஒழுக்கம் என்றும் கூறலாம். இப்போதெல்லாம் ரயிலில் அடுத்தவர் உட்கார்ந்து இருக்கும் சீட்டில் கூட காலில் செருப்போடு தூக்கி வைக்கும் கலாச்சாரம் பரவி வருகிறது


Venkatasubramanian krishnamurthy
நவ 02, 2025 06:06

அதெப்படி இந்து சம்மந்தப்பட்ட கூட்டங்களில் மட்டும் நெரிசல் வருகிறது. மற்ற மத சம்பந்தமான ஊர்வலங்களில் வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகிறது?


Ramesh Sargam
நவ 01, 2025 23:39

நம் நாட்டில் இதுபோன்று கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் சம்பவம் எத்தனை நடந்துள்ளது. அதிலிருந்து அரசு, மக்கள், கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்? ஒன்றுமில்லை. அரசு, அரசு அதிகாரிகள், கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் இவர்களை விட்டுவிடுவோம். மக்கள் முதலில் திருந்தவேண்டும். சமீபத்தில் கிரிக்கெட் வெற்றி விழா பெங்களூரில் நடந்தது. அந்த ஊர் அணி RCB, போனமுறை IPL போட்டியில் வெற்றிவாகை சூடியதை கொண்டாட லட்சக்கணக்கில் கூடியபோது ஏற்பட்ட நெரிசலில் எத்தனை பேர் இறந்தார்கள். மிக சமீபத்தில் கரூரில் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் நாற்பதற்கும் மேலானோர் இறந்தார்கள். அந்த நிகழ்வுகளை மனதில் கொண்டாவது ஆந்திராவில் மக்கள் ஜாக்கிரதையாக சாமி கும்பிட சென்றிருக்கவேண்டும். இல்லை. முன் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் மறந்து மீண்டும் பாதுகாப்பு இல்லாமல் கூடினார்கள். நெரிசலில் சிக்கி மாண்டார்கள். ஆக முதல் தவறு மக்களுடையதே. பக்தி அவசியம். மறுப்பதற்கில்லை. அதைவிட மிக மிக முக்கியம். பாதுகாப்பு.


பக்தன்
நவ 01, 2025 22:55

இரங்கல் தெரிவித்தவர்கள் போனா மொத்தம் ஒன்பது பேர்தான் உள்ளே இருப்பார்கள். அவ்ளோ செக்யூரிட்டி...


அப்பாவி
நவ 01, 2025 22:53

பக்தி முத்தி போச்சு...


ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 22:46

ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் கிடையாதா?


Radhakrishnan Seetharaman
நவ 01, 2025 22:36

சென்னை ஏர் ஷோவில் ஐந்து பேர் இறந்தது நினைவில்லையா ?


Vasan
நவ 02, 2025 01:45

நினைவிருக்கிறது, 2024ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, அதாவது சென்ற வருடம் 2024ல், அதாவது இந்த 2025ம் வருடத்தில் அல்ல.


Rajesh S
நவ 02, 2025 02:06

அது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சம்பவம் அல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை