உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய வீரருக்கு பயிற்சியாளர் பதவி

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய வீரருக்கு பயிற்சியாளர் பதவி

மும்பை: 2013 ஆம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்பாட் பிக்சிங் ஊழலில் சிறைக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான் மும்பையின் 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் போகிறார். பிரிமியர் லீக் கிரிக்கெட் 2013 ஸ்பாட் பிக்சிங் ஊழல் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போட்டது.இதே வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவான், இப்போது மீண்டும் கிரிக்கெட் உலகிற்குத் திரும்புகிறார். இந்த முறை வீரராக அல்ல, பயிற்சியாளராகத் திரும்புகிறார். மும்பை கிரிக்கெட் சங்கம், சவானை 14 வயதுக்குட்பட்ட மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.இடது கை சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவானுக்கு 2013ம் ஆண்டு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. ஆனால் 2021ம் ஆண்டு இந்த தடை, ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தற்போது மும்பையின் 14 வயதுக்குட்பட்டோர் அணியைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 'இது என் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ், அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்' என சவான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
ஜூலை 03, 2025 17:21

இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் குற்றவாளி / சிறை சென்றவர் என்றாலும் உன் பின்னே ஒரு பெரிய டுபாக்கூர் இருந்தால் உங்களுக்கு மேல் பதவி எப்படியும் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகின்றது


அப்பாவி
ஜூலை 03, 2025 16:37

சின்ன வயசிலிருந்தே பித்தலாட்டமெல்லாம் சொல்லிக் குடுங்க. உங்களை மாதிரி மாட்டிக்கக் கூடாது. யாரையும் காட்டியும் குடுக்கக் கூடாது.


Santhakumar Srinivasalu
ஜூலை 03, 2025 14:24

இதெல்லாம் இந்திய மக்களை ஏமாற்றும கிர்க்கட் கண்கட்டு விளையாட்டு!


Kalyan Singapore
ஜூலை 03, 2025 14:23

தென்னாட்டு வீரர் ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை குறைக்கப்பட்டடா? இல்லை வடநாட்டு வீரர்களுக்கு அதுவும் மும்பை டெல்லி போன்ற அணிகளில் உள்ள வீரர்களுக்க? சலுகைகள் அவர்களுக்கு மட்டும் தானா ?


Ramesh Sargam
ஜூலை 03, 2025 13:01

இவர் கீழ் பயிற்சி பெரும் இளம்வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டில் முன்னேறமாட்டார்கள். ஆனால் கட்டாயம் கிரிக்கெட் சூத்தாட்டம் செய்வதில் தேறிவிடுவார்கள். முதலில் நீக்குங்கள் .


Oviya Vijay
ஜூலை 03, 2025 12:15

அவருக்கான தண்டனையை அவர் அனுபவித்தாயிற்று... தண்டனைக் காலம் முடிந்து அவர் திருந்தி புதிய வாழ்க்கை தொடங்க அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். அதை விடுத்து அவர் ஏற்கனவே செய்த தவறை மீடியாக்கள் தொடர்ந்து ஹைலைட் செய்வதன் மூலம் அவரது எதிர்கால வாழ்க்கை கற்பனை செய்ய முடியாதவாறு பாதிக்கப்படலாம். மீண்டும் அவர் தவறு செய்யும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்திகள் வெளியிடலாம். ஆனால் அவரை வாழ்நாள் முழுவதும் குற்றவாளி போல் நடத்துவது வேதனைக்குரியது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை