உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் ஆணைய ஒருமைப்பாட்டின் மீது மற்றொரு தாக்குதல்; கார்கே குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைய ஒருமைப்பாட்டின் மீது மற்றொரு தாக்குதல்; கார்கே குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை மோடி அரசு அழிப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தேர்தல் தொடர்பான சில ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு சட்டதிருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற சில குறிப்பிட்ட ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். அதேவேளையில் மின்னணு ஆவணங்கள் கிடைக்காது. இந்த சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திருத்தம், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்கான மோடி அரசின் மற்றொரு தாக்குதலாகும். முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நீக்கினீர்கள். தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டும், தேர்தல் ஆவண தகவல்களை கொடுப்பதை கட்டுப்படுத்துகிறீர்கள். வாக்காளர் நீக்கம், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஒவ்வொரு முறை காங்கிரஸ் கடிதம் எழுதுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் அலட்சியமாக பதில் அளிப்பதுடன், புகார்கள் மீது தீவிரம் காட்டுவதில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாததற்கு இதுவும் ஒரு சான்றாகும். மோடி அரசின் இந்த தாக்குதல்களில் இருந்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Rpalni
டிச 23, 2024 20:06

இன்னொமொரு கீழ்பாக்க கேஸ்


Anantharaman Srinivasan
டிச 22, 2024 23:04

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நீக்கியது எடுப்பார் கைபிள்ளையைப்போல் தேர்தல் ஆணைத்தை தன் இஷ்டப்படி ஆட்டி வைக்க.சுப்ரீம்கோர்ட் நீதிபதியிருந்தால் அவரை மீறி மத்திய அரசால் எதுவும் செய்யமுடியாது. தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டும், தேர்தல் ஆவண தகவல்களை கொடுக்க மறுத்தால் கோர்ட்டில் முறையிடலாமே.


visu
டிச 23, 2024 12:10

ஹாஹா தேர்தல் ஆணையராக TN சேஷன் இருந்தபோது அவர் அதிகாரத்தை குறைக்க கூடுதல் தேர்தல் ஆணையர்களை நியமித்ததது காங்கிரஸ் இவர்கள் தேர்தல் ஆணைய சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள் குழுவில் இத்தேர்தலுக்கு முன் எப்போதுமே உச்ச நீதிமன்ற நீதிபதி இருந்ததேயில்லையே அப்புறம் இப்ப மட்டும் ஏன் தேவை அனைத்தும் சட்டப்படியே நடக்கிறது இப்போது


ஆரூர் ரங்
டிச 22, 2024 20:59

80 களில் சேஷன் காலத்துக்கு முன்பு வரை தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு அங்கமாகவே செயல்பட்டது இந்த முதியவருக்கு நினைவிருக்கும். எல்லா முடிவுகளும் பிரதமரால் எடுக்கப்படும். அப்போ ஏன் மவுனம் சாதித்தார்?


Dharmavaan
டிச 23, 2024 07:11

உள்துறை அல்ல சட்ட அமைச்சகம்


GMM
டிச 22, 2024 20:47

முன்பு போல், ஒரு தேர்தல் ஆணையர் போதும். நீதிமன்ற பெஞ்சு முறை சட்டம் , நீதி தொடர்புடையது. சிறந்த தீர்வை தேட ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள். தேர்தல் நிர்வாகம் தொடர்புடையது. வகுக்க பட்ட விதியின் கீழ் செயல்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் தேவையில்லை. மாறுபட்ட முடிவு எடுக்க முடியாது. சட்ட சிக்கலை உருவாக்கும். தேர்தல் ஆணையர் நியமிக்கும் குழுவில் உச்ச மன்றம் நீதிபதி எதற்கு ? உச்ச நீதிபதியும் ஒரு வாக்காளர். போலீஸ், நீதிபதிக்கு தனி நபர் ஆவண விவரம் இருக்காது. தெரியாது. போலி வாக்காளர் நீக்கம் அவசியம். கட்சியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. வாக்கு இயந்திரத்திற்கு என்ன வெளிப்படை தேவை?. நாடு முழுவதும் ஆளும் கட்சி மட்டும் ஜெயித்தால் சந்தேகிக்கலாம். ஊழல், மோசடி, கற்பழிப்பு, கொலை குற்றவாளிகள் சும்மா இருக்க மாட்டார்கள். மாநில சுயாட்சி, தனி நாடு, வெளிப்படை இல்லை என்று ஒருமைப்பாட்டை தாக்கிவருவர் . இவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்.


Rajasekar Jayaraman
டிச 22, 2024 20:43

இவர் என்ன லூசா? இல்ல நடிக்கிறாரா.


எவர்கிங்
டிச 22, 2024 20:22

கத்துவதை தவிர வேறு வேலை...


Nagarajan S
டிச 22, 2024 19:59

நீங்களும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை நாட்டில் எந்த நல்லதும் நடக்க விட மாட்டீர்கள்


R.Balasubramanian
டிச 22, 2024 19:46

எண்பதுக்கு மேலே வயது. ஓய்வு பெறும் வயது. நீங்கள் விலகுவது உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.


கண்ணன்,மேலூர்
டிச 22, 2024 20:03

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் உள்ளது இப்போதைய இத்தாலி காங்கிரஸ் கட்சி...


SANKAR
டிச 23, 2024 06:19

Modi is 75.According to rule d by Modi himself he should not be PM


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 19:18

உங்க கதறல் பயன்படாது ..... உங்களை இதுகாறும் நம்பியவர்களும் இனி நம்பப்போவதில்லை ....


Narayanan Muthu
டிச 22, 2024 19:58

ஆம் உங்கள் கதறல் செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஜனநாயகத்தின் குரலை நசுக்கி தேர்தல் மோசடியை வெளிப்படையாக அரங்கேற்றுவதற்கான நடவடிக்கையை தேச விரோதிகள் தொடங்கி விட்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 05:54

கட்டுமரமே வலியுறுத்திய ஒரே நாடு ஒரே தேர்தல் முறை எப்படி மோசடியாகும் ???? மோசடி என்றால் அவருக்கு அலர்ஜியாச்சே ???? அவரது குடும்ப வண்டி கழுவும் அடிமைகள் இங்கே பதிவிடும் முன்பு யோசிக்க வேண்டாமா ????


Kasimani Baskaran
டிச 22, 2024 18:46

அரசியல் சாசனத்தையே இஷ்டத்துக்கு திருத்தியவர்கள் இவர்கள். இப்பொழுது எதற்க்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று கதறுகிறார்கள்.