உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடு: பாக்., மீது அனுராக் தாக்கூர் எம்.பி.,குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடு: பாக்., மீது அனுராக் தாக்கூர் எம்.பி.,குற்றச்சாட்டு

ஹமீர்பூர்: பயங்கரவாதிகளுக்கு நிதியளித்து உதவ மற்றும் பயங்கரவாதத்தை பரப்ப, பாகிஸ்தான் அரசு ஆதரவாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய பா.ஜ., எம்.பி.,யுமான அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார்.ஹிமாச்சல் மாநிலம் ஹமீர்பூரில் உள்ள நடவுன் மற்றும் டெஹ்ராவில் பா.ஜ., தொண்டர்களை அனுராக் தாக்கூர் இன்று சந்தித்து பேசினார்.அவர் பேசியதாவது:பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்கவும், வளர்க்கவும் செயல்படுகிறது. பயங்கரவாதத்தின் ஆதரவு பெற்ற நாடு என்று சான்றளிக்கப்பட்டது தான் பாகிஸ்தான். எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக இந்தியாவை பலவீனத்திற்கு உட்படுத்த முயற்சிக்கிறது. அது நடக்காது. பாகிஸ்தான் தன் பயங்கரவாத இணைப்புகளை மறைக்க முயற்சிக்கிறது,அதற்கு பதிலடிதான் ஆபரேஷன் சிந்துார்.பயங்கரவாதத்தின் மீதான இந்தியாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள், தற்போது நாட்டின் 'புதிய இயல்பு', பயங்கரவாதத்தை வளர்க்கும் அரசுக்கும், பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களுக்கும் இடையே இந்தியா வேறுபாடு காட்டாது. இவ்வாறு அனுராக் தாக்கூர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 07, 2025 22:55

பயங்கரவாதிகளை பெத்துப்போடுவதும் அவர்களே. பெத்தால், வளர்க்கவும் வேண்டுமே என்ன செய்வது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை