உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு

பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இனி வரும் காலங்களில் இந்தியா மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் போராகவே கருதப்படும்,'' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உறுதி அளித்தது. இதன்படி, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடவடிக்கை துவக்கிய இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.முன்னதாக, 'வருங்காலத்தில் இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் அனைத்தும் போராகவே கருதப்பட்டு, அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும்' என அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

subramanian
மே 11, 2025 22:59

சபாஷ் மோடிஜீ


Karthik
மே 10, 2025 22:11

இங்கு கருத்துப் பகுதியில் நாட்டுக்கு எதிராக அரசுக்கு எதிராக பாகிஸ்தான் பக்கிகளுக்கு ஆதரவாகவும் போலி பெயரில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சில கருத்துக் கந்தசாமிகளை கடந்த மூன்று நான்கு நாட்களாக காணவில்லை..அவர்களைக் கண்டால் வரச் சொல்லுங்கோ.. அவர்களுக்கான இடம் காத்திருக்கிறது.


veeramani hariharan
மே 10, 2025 19:36

This is good decision if any future terrorists attack shld be treated as war and India shld retailte immediately on Enemy country


தழிழ் வளவன்
மே 10, 2025 18:18

இந்தியாவில் உள்ள பாக்.,(பயங்கர வாதிகள்) ஆதரவாளரகள் மீது கடும் நடவடிக்கை மட்டுமல்ல நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.


மீனவ நண்பன்
மே 10, 2025 20:32

செய்யுங்க...


Pandianpillai Pandi
மே 10, 2025 17:21

மகிழ்ச்சி. இதைத்தான் கூறினேன். இந்தியாவின் கண்ணோட்டம் தீவிரவாத செயல் என்று கருதாமல் நம் நாட்டின் தாக்குதலாக கருதி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல நாடுகள் வரும். நமக்கு ஐ நா கூட ஆதரவு தராது. உலக நாடுகளுக்கு நமது நாட்டின் வளமும் நமது ஆற்றலும் தான் தேவையாக இருக்கிறது. இந்தியாவை இனி சீண்டி கூட பார்க்க கனவிலும் யாரும் நினைக்க கூடாது.


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 10, 2025 17:02

பாரத நாட்டிற்குள் இருந்து கொண்டு,போலியான பெயர்களில் நாட்டிற்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களையும் ,அவர்களின் பின்புபுலத்தையும் விசாரித்து நடவடிக்கை கடுமையானால் தான் உள் நாட்டு தேச துரோகிகளை களையெடுக்க முடியும்..... இதுவும் ஓர் தீவிரவாதத்திற்கு எதிரான உள் நாட்டு போர் தான்.


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 16:53

சரியான முடிவு ........... இந்தியாவில் உள்ள பன்றிஸ்தான் அடிமைகளுக்கும் கடுமையான தண்டனை தேவை ..... குறிப்பாக தமிழ்நாடு , கேரளா, மேற்குவங்கத்தில் இருக்கும் எச்சிபிரியாணி பொறிக்கிஸ் க்கு ..... இருட்டறையில் சோறு தண்ணியில்லாமல் சாகும் வரை கிடத்துங்கள் ......


சமீபத்திய செய்தி