உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்: மே 4ல் நடக்கிறது தேர்வு

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்: மே 4ல் நடக்கிறது தேர்வு

புதுடில்லி: இளநிலை நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது. நாட்டின் மிகப் பெரிய நுழைவுத்தேர்வாக கருதப்படும் இளநிலை நீட் தேர்வை, ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர்.இந்நிலையில், 2025ம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய நாட்கள்

விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: பிப்., 7பதிவு செய்ய கடைசி நாள்: மார்ச் 7தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 7நுழைவுச்சீட்டு வெளியிடும் நாள்: மே 1தேர்வு நடக்கும் நாள்: மே 4 தேர்வு முடிவு வெளியிடும் நாள்: ஜூன் 14தேர்வு நேரம்: 3 மணி நேரம்தேர்வு நேரம் : மதியம் 2:00 முதல் மாலை 05:00 வரை

கட்டண விவரம்

பொதுப்பிரிவு மாணவர்கள் : ரூ.1700பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்: ரூ.1,600எஸ்சி/எஸ்டி/3ம் பாலினத்தவர்கள்: ரூ.1000வெளிநாட்டினர் :ரூ.9,500இதனுடன் ஜி.எஸ்.டி., மற்றும் சேவைக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K.n. Dhasarathan
பிப் 07, 2025 20:34

இந்த நீட் தேர்வை நடத்தும் ஒப்பந்த அமைப்பு, ஒழுக்கமாக நடத்துமா ? அல்லது முன்பு போல, ஆன், பெண் உள்ளாடைகளை சோதிக்கும் வேலைகள், தொடருமா ? தாலி யை கழற்ற சொல்லும் பண்பாடு தொடருமா ? அடுத்து இங்கே அவ்வளவு நாடகம் நடத்தியவர்கள், வட மாநிலங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பது, வேறு தவறான செய்கைகள் செய்வது தொடருமா ? அல்லது அந்த ஒப்பந்த கம்பெனி மாறிவிட்டதா ? விபரம் அறிந்தவர்கள், அதிகாரிகள் பதில் சொல்வார்களா ?


guna
பிப் 08, 2025 06:38

அது எல்லாம் படித்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள்...உன் போல திருட்டு திராவிடம் இங்கே என்ன வேலை


rajan_subramanian manian
பிப் 07, 2025 20:30

நீட் தேர்வு எழுத இன்று முதல் தயாராகும் மாணவர்கள்: ஸ்டாலின்,உடைய நிதி,வைக்கோ, திருமா, பெருந்தகை,கமால், சீமான், ஜோசப், பழனி சாமி,உண்டியல்ஸ் மற்றும் எல்லா அல்லக்கை ஊடக நெறியாளர்கள். இவர்களுக்கு அரசு கொடுத்த quota கிடையாது. இவர்களில் யார் பாஸ் மார்க் வாங்கினாலும் நீட் தேசிய அளவில் அடுத்த ஆண்டு முதல் கிடையாது.


பெரிய குத்தூசி
பிப் 07, 2025 20:09

நீட் தேர்வு அருமையான தேர்வு. ஆனால் உண்மையில் 2024 ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நீட் தேர்வு முடிவு வந்து 4 மாதங்கள் ஆகியும் மருத்துவ கவுன்சில் ஆரம்பிக்காமல் மருத்துவ படிப்பில் சேரும் வரை உச்சநீதிமன்றம் சிம்மசொப்பனம் மருத்துவ படிப்பு கனவை ஆகி விட்டார்கள். உச்சநீதிமன்றம் நீட் முறைகேடுகளை விசாரிக்கப்போய், விசாரணை ரூட் மாறி 10 லட்சம் மாணவர்களுக்கு 5 மார்க்கை குறைத்துவிட்டு தீர்ப்பு என்ற தேவையில்லாத ஆணியை சந்திரசூட் என்கிற அண்ணாவி நீதிபதி தீர்ப்பை எழுதி மாணவர்களின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்தவருடம் தேவையில்லாத குழப்பம் ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை