உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய ஒப்புதல்

23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய ஒப்புதல்

புதுடில்லி:டில்லியில் 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணைய பரிந்துரைக்கு முதல்வர் ஆதிஷி சிங் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்தக் கோப்பு துணைநிலை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.'டானிக்ஸ்' எனப்படும் டில்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ, தாத்ரா, நாகர் ஹாவேலி ஆகிய யூனியன் பிரதேச கேடரில் பணிபுரியும், 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.இந்தப் பரிந்துரைக்கு டில்லி முதல்வர் ஆதிஷி சிங் நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்துக் இந்தக் கோப்பு துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. “இந்த இடமாற்றம் காரணமாக பல்வேறு துறைகளில் புதிய முன்னேற்றம் ஏற்படும், நிர்வாகத் திறன் மேம்பாடு அடையும்,”என, முதல்வர் ஆதிஷி சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை