UPDATED : அக் 30, 2025 11:05 PM | ADDED : அக் 30, 2025 08:40 PM
சென்னை: இந்தியாவின் 90வது மற்றும் தமிழகத்தின் 35வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை சென்னயைச் சேர்ந்த இளம்பரிதி (16) என்ற மாணவருக்கு கிடைத்துள்ளது.சென்னையில் 2009ல் பிறந்த இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். செஸ் மீது இளம் வயதில் இருந்தே அவருக்கு ஆர்வம் அதிகம். இதனயைடுத்து ஷியாம் சுந்தர் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h3tialfq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரது திறமையை கடந்த 2022ல் சர்வதேச சமூகம் கவனிக்கத்துவங்கியது. அந்த ஆண்டு, அவரின் பயிற்சிக்கு நெதர்லாந்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஸ் கிரி, தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை அளித்து இருந்தார். போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த செஸ் போட்டியில் இவர் இளம்பரிதி பட்டம் வென்றார். மேலும் இப்போட்டியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான 2500 elo புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் இளம்பரிதிக்கு இந்தியாவின் 90வது மற்றும் தமிழகத்தின் 35வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்து கிடைத்தது.செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற இளம்பரிதிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.வாழ்த்து
முதல்வர் வாழ்த்துமுதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்தின் சாம்பியன் கிரீடத்துக்கு மற்றொரு மணிமகுடத்தை சேர்த்துள்ளார். தமிழகத்தில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருனானார்கள் எனத் தெரிவித்துள்ளார்.தமிழக துணை முதல்வர் உதயநிதி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவதுஇந்தியா மற்றும் தமிழகத்தின் செஸ் போட்டிகளில் மற்றொரு மைல்கல் மற்றும் பெருமைமிக்க தருணம். இந்தியாவின் 90வது தமிழகத்தின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆன இளம்பரிதிக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால செஸ் பயணம் தொடர்ந்து வெற்ற பெறவும், இன்னும் பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி கூறியுள்ளார்.