உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுத கடத்தல் வழக்கு: லாலுவுக்கு ம.பி. கோர்ட் கைது வாரண்ட்

ஆயுத கடத்தல் வழக்கு: லாலுவுக்கு ம.பி. கோர்ட் கைது வாரண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ஆயுத கடத்தல் வழக்கில் ஆஜராகாத பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு எதிராக ம.பி. கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.பீஹார் மாநிலத்தில் கடந்த 1995-97 ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ம.பி. மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த அங்கீகாரமில்லாத நிறுவனத்திடம் ஆவணங்கள் மூலம் ஆயுதங்களை வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இந்தர்கஞ்ச் போலீசார் லாலு உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு ம.பி. மாநிலம் ஜபல்பூரில் கீழமை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.ஜபல்பூர் கீழமை கோர்ட் லாலுவுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இது குறித்து எம்.பி., எல்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் மனுவை விசாரித்த நீதிபதி மகேந்திரா சைனி, லாலுவுக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஏப் 07, 2024 06:48

வாழும் கட்டுமரம் இன்னும் பல கேஸ்களில் மாட்டும். அய்யோ கொல்றாங்க டெக்னிக் கற்றுக் கொள்ள வேண்டும்


sankaranarayanan
ஏப் 06, 2024 23:48

உச்சநீதி மன்றம் தலையீடு இருக்கும்வரை இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது மறுநாளே இவர்கள் உச்சநீதி மன்றத்தை நாடி தடை வாங்கிவிடுவார்கள் உச்ச நீதிமன்றத்தான் மத்திய செக்ரடெரிட் அங்கிருந்துதான் எல்லா ஆணைகளும் பிறப்பிதுக்கப்படும்


A1Suresh
ஏப் 06, 2024 23:05

தமிழகத்தில் பொன்முடியும், துரைமுருகனும் கைதாகியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் எப்படித்தான் தப்பிக்கின்றார்களோபரம ரகசியம் வரிசையாக தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், இப்படி லீஸ்ட் நீண்டாலும் தப்பித்து விடுகின்றனர் ஆண்டவனுக்கே வெளிச்சம் பணம் பத்தும் செய்கிறது வடக்கில் ஹேமந்த் சோரன், கேஜ்ரிவாலுக்கு கூட தெரிவதில்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ