உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அத்துமீறும் பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

அத்துமீறும் பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

புதுடில்லி: எல்லையில் அத்துமீறும் பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.இது குறித்து விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளதாவது: இன்று(மே 10) மாலை 5மணிக்கு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு பாக்., உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x1popmqj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் மீண்டும் உதம்பூர், ஸ்ரீநகரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி (மே 10) இரவு பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை தீவிரமாகவும் பொறுப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும். இந்திய ராணுவம் தற்போதைய நிலைமையை விழிப்புணர்வுடன் கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறினால் கடுமையான பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

xyzabc
மே 11, 2025 11:40

If pak terrorists attack again in the future, Indian military will have all the rights to go for a war unconditionally. This should be part of the cease fire agreement.


MARUTHU PANDIAR
மே 11, 2025 09:24

போர் நிறுத்தமாவது கீர் ஒப்பந்தமாவது? சில மணி நேரங்களிலேயே மூர்க்கன் தன் புத்தியை காட்டி விட்டான். IMF கடன் கையில் கிடைக்கும் வரை இந்த பிராடு வேலை. பிறகு சீனா உதவியுடன் முழு அளவிலான பயங்கரவாத ராணுவ கட்டமைப்புக்கள் தொடங்கப்படும். பயங்கரவாத உற்பத்திக்கு கணிசமாக ஒதுக்கப்படும். இது கூட தெரியாதா?


naranam
மே 11, 2025 08:53

அட போங்கப்பா.. ஆரம்பித்த வேலையை பாதியிலேயே நிறுத்தி விட்டு...இப்ப என்ன புலம்பல்..


VENKATASUBRAMANIAN
மே 11, 2025 08:32

பாகிஸ்தான் எப்போதுமே நம்பிக்கை கங்கு உரியவர்கள் இல்லை. இனிமேல் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை. அமெரிக்கா புரிந்து கொள்ளட்டும். இதுதான் பாகிஸ்தான் லட்சணம்


Ravi Manickam
மே 11, 2025 08:00

எதோ ஒரு மன நெருடலாகவே இருக்கிறது, நம்புவதற்க்கு அருகதையற்ற ஜந்துக்கள் பாக் அரசியல்வாதிகள் மற்றும் பாக் ராணுவம். எல்லா நாட்டிடமும் ராணுவம் இருக்கும் ஆனால் ராணுவத்திடம் மட்டும் இருக்கும் ஒரே நாடு பக்கரிஸ்தான், கவனம் தேவை, ஜெய் ஹிந்த், பாரத் மாத கீ ஜெய்.


Kasimani Baskaran
மே 11, 2025 07:09

தீவிரவாதிகளுடன் கும்மி அடிக்கும் பாக்கி ராணுவம் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். துருக்கியை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும்.


Naga Subramanian
மே 11, 2025 05:03

நம்பக தன்மையற்ற பாகிஸ்தானிடம் இருந்து இனிமேல் எந்தவொரு பிரச்னையும் வராதவாறு கீழ்கண்டவாறு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவையாவன: [01] பாக் ஆக்கிரமித்த காஷ்மீரை அவர்களிடமிருந்து விடுவித்தல், [02]இந்தியாவை சீரழித்த மற்றும் தீவிரவாதிகளை நம்மிடம் ஒப்படைத்தல், [03] காவிரி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தருவதை போல, சிந்து நதி நீரை பகிர்தல் [04] வருடா வருடம் நதிநீர் பகிர்மானம் குறித்து ஒப்பந்தம் நிறைவேற்றுதல் [05] அவர்கள் மூலம் எந்தவிதமான தீவிரவாதம் நடந்தாலும், இந்திய இராணுவம் இறங்கி அடித்தல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை