உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணக்கு தாக்கல் செய்யாவிடில் கைது? வருமான வரி சட்டத்தில் பரிசீலனை

கணக்கு தாக்கல் செய்யாவிடில் கைது? வருமான வரி சட்டத்தில் பரிசீலனை

புதுடில்லி: வருமான வரி விலக்கு வரம்புக்கு மேல் வருமான ஈட்டியும் கணக்கு தாக்கல் செய்யத் தவறுவோர், வருமான வரிச் சட்டத்தின் மறுஆய்வில் அமல்படுத்தப்பட உள்ள புதிய விதிகளின்படி, கைது செய்யப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரிச் சட்ட மறுஆய்வு குறித்து அறிவித்தார். பழைய சட்டப் பிரிவுகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.வருமான வரி விதிகளை எளிதாக புரிந்து கொள்ளும்படியும், வழக்குகளை குறைக்கும் நோக்கிலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட, வரி செலுத்துவோரின் கருத்துகள் வரவேற்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.அதன்படி, மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் உட்புற குழு அமைக்கப்பட்டு, வருமான வரிச் சட்ட ஷரத்துகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இப்போதுள்ள சட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்த வேண்டிய வரம்புக்குள் வருவாய் ஈட்டியும், தெரிந்தே கணக்கு தாக்கல் செய்யாதவர் மீது வழக்கு தொடரப்படும்.குறிப்பாக, 25,000 ரூபாய்க்கு மேல் வரி நிலுவை இருந்து, கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்துடன், மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.எனினும், இந்த சட்டப்பிரிவில், குறைந்த அளவிலான வரி பாக்கி வைத்திருப்போர், மூத்த குடிமக்கள், பெண்கள், வருமான வரி விலக்கு வரம்புக்கு கீழ் வருவாய் ஈட்டுபவர்கள், கணக்கு தாக்கல் செய்யாததற்கு சரியான காரணம் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டு, சட்டப்பிரிவில் மாற்றம் செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S.Martin Manoj
நவ 22, 2024 16:46

அப்படியே அந்த தேர்தல் பத்திர மோசடி அப்புறம் பி எம் கேர் பண்ட் இதுக்கெல்லாம் ஒரு கணக்கு கேட்கணும்


Dharmavaan
நவ 22, 2024 09:21

அரசியல் காட்சிகள் போலி தொண்டு நிறுவனங்கள் மதம் மாற்றி நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழே வரவேண்டும்


GMM
நவ 22, 2024 08:52

வருமான வரி வரம்புக்கு கீழ் தாக்கல் கட்டாயம் கூடாது. அனைத்து வங்கி கணக்கிற்கும் கட்டாயம் வருமான வரி எண் . கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் எதற்கும் வருமான வரி விலக்கு கூடாது. குறைந்த வரிவிதிப்பு அவசியம். பத்திர பதிவில் வருமான வரி கணக்கு கட்டாயம். பதிவான ஒரு மாதம் பின், வருமான வரி துறைக்கு மாநில நிர்வாகம் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். தவறினால், பண சலவை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் கைது, சிறை ஒரு மோசமான நிலைக்கு அரசை கொண்டு செல்லும். அதிகாரிகள், அரசியல் பழியை தீர்த்து கொள்வர். வருவாய், சம்பளம், சொத்தில் பிடிக்க முடியும். பின் ஏன் கைது. ?


Barakat Ali
நவ 22, 2024 08:24

வங்கியில் கடன் வாங்கிவிட்டு அல்வா கொடுக்கும் தொழிலதிபர்களை எதுவும் செய்ய வக்கில்லாத நிம்மிம்மாம்மி ... யூசுலெஸ்ஸு ......


Duruvesan
நவ 22, 2024 06:22

எழுதி வெச்சிக்கோ பிஜேபிக்கு முடிவுரை எழுத இது தான் ஆயுதம், இதுக்கு காங்கிரஸ் ஆயிரம் மடங்கு மேல், இவனுங்க ரெய்ட் இது வரை 12 வருஷத்தில் 1000 மேல, கண்டுபிச்ச ரொக்கம் ஒன்னும் இல்லை, எவனாவது அரெஸ்ட் அதான் இல்ல, இவனுங்க அதானி கூட ஆடும் ஆட்டம் மிக அதிகம்


Indhuindian
நவ 22, 2024 05:35

வருமான வரி கணக்கை இணையத்தளம் மூலம் உரிய நேரத்தில் தாக்கல் செய்தும் அதை சரியாக பரிச்சய் செய்யாமல் வரி அதிகமாக செலுத்தியவர்களுக்கு மீண்டும் வரி செலுத்த டிமாண்ட் அனுப்பியும், அதை சரி செய்ய இனைய தளம் மூலம் மறு பரிசோதனை செய்ய கூறியும் அதை மறுபடியும் சரி செய்யாமல் ஏனோ தானோ வென்று பரிசீலனை செய்யும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை