உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகன் அப்பாவி என்கிறார் கைதானவரின் தாய்

மகன் அப்பாவி என்கிறார் கைதானவரின் தாய்

காசிபூர்:திருமணமான சில நாட்களிலேயே, மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவு சென்றிருந்த நேரத்தில், கணவரை கொன்றதாக சோனம் என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குஷ்வாஹா என்பவரின் தாய் சன்னி தேவி, நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில், 'என் மகன் ராஜ் குஷ்வாஹா, எந்த குற்றமும் செய்யாதவன்; அப்பாவி. அவனை போலீசார் வேண்டுமென்றே பிடித்துள்ளனர். கொலையான இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சியின் இறுதிச் சடங்கில் என் மகன் பங்கேற்றான். அப்போது, ராஜா ரகுவன்சியின் தந்தைக்கு ஆறுதல் கூறினான்' என்றார்.அவர் போலவே, ராஜ் குஷ்வாஹாவின் சகோதரி சுகாஷினியும் கூறினார். 'கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சோனம் என்ற பெண்ணை, ராஜ் குஷ்வாஹா, அக்கா என்றே அழைப்பார். இருவரும் ஓரிரு நிமிடங்கள் தான் பேசியுள்ளனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ