ஆட்டோ டிரைவர்களுக்கு இன்சூரன்ஸ் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
புதுடில்லி:“ஆட்டோ டிரைவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு 'இன்சூரன்ஸ்' வழங்கப்படும்,”என, முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் பணிகள் டில்லியில் களைகட்டியுள்ளன.ஆம் ஆத்மி அரசு இதுவரை 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையே அறிவித்து விட்டது.இந்நிலையில், கோண்ட்லி தொகுதியில் ஆட்டோ டிரைவர்களை அவர்களின் குடும்பத்தினருடன் நேற்று சந்தித்து உரையாடினார். அப்போதுக் அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:ஆம் ஆத்மி அரசு டில்லியில் ஏற்கனவே பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வரும் தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தவுடன், ஆட்டோ டிரைவர்களின் பெண் குழந்தைகளின் திருமணத்துக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் ஆண்டுக்கு இருமுறை சீருடைப் படியாக 2,500 ரூபாய் வழங்கப்படும். ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்விப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆட்டோ டிரைவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.