உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபாவுக்கு கெஜ்ரிவால் போட்டியா: ஆம் ஆத்மி மறுப்பு

ராஜ்யசபாவுக்கு கெஜ்ரிவால் போட்டியா: ஆம் ஆத்மி மறுப்பு

புதுடில்லி: டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று வெளியான தகவலை மறுத்துள்ள ஆம் ஆத்மி, அவரை ஒரு தொகுதிக்குள் அடைக்க முடியாது எனக்கூறியுள்ளது.டில்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் ராஜ்யசபாவுக்கு செல்லப்போவதாக தகவல் வெளியாகி வந்தது.இந்நிலையில், பஞ்சாபில் லூதியானா மேற்கு சட்டசபைத் தொகுதி காலியாக உள்ளது. இத்தேர்தலில், அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் அரோரா போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது. இவர் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டி உள்ளது. இதனையடுத்து, கெஜ்ரிவால் மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்லலாம் என மீண்டும் தகவல் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறியதாவது: கெஜ்ரிவால் ராஜ்யசபாவிற்கு செல்லவில்லை. முன்பு மீடியாக்கள், கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் ஆவார் என்றன. தற்போது ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட போவதாக கூறுகின்றன. இரண்டுமே தவறு. கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவருக்கான தேவை அதிகம் உள்ளது. அவரை ஒரு தொகுதிக்குள் அடைத்து விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nandakumar Naidu.
பிப் 26, 2025 19:17

ஆமாம் அவரை ஒரு தொகுதிக்குள் அடைக்க முடியாது, ஏனெனில் எல்லா தொகுதிகளிலும் கொள்ளையடிக்க வேண்டும், தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத செயல்களை செய்ய வேண்டும். ஒரே தொகுதியில் முடக்கி விட்டால் எப்படி?.


Siva Subramaniam
பிப் 26, 2025 17:54

In our country we have seen alleged criminals like Poolandevi, Laluprasad, Arun Gawly etc continued in politics, despite of their ges. No wonder Kejriwal is also trying to get into R.S. We are truly a democratic nation.


என்றும் இந்தியன்
பிப் 26, 2025 17:52

இதிலென்ன மறுப்பு வேண்டிக்கிடக்குது அமைதியாக இரு. முதல்வர் பதவியிலிருந்த ஒருவன் அரசியல்பதவியில் இல்லையெனில் வீதியில் போகும் ஒரு பிச்சைக்காரன் கூட மதிக்கமாட்டான் ஆகவே ஏதாவது கோல்மால் செய்து ஒரு பதவியை தக்கவைத்துகொள்ளப்போகின்றான் இந்தசொறிவால்


Amar Akbar Antony
பிப் 26, 2025 17:45

சரியாக சொன்னீர்கள். அவரை திஹாரில் அடைக்கமட்டுமே முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை