உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்களின் செயல்திறனை பார்த்து நாடே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்,தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த மே-27 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 43 நாடுகள் பங்கேற்ற 2025-ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இந்தியா 2வது இடம் பிடித்தது.கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா, 8 தங்கப்பதக்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் பெற்ற பதக்க பட்டியலில் 2வது இடம் பிடித்தது. பதக்கபட்டியலில் 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து சீனா,முதலிடம் பெற்றது.ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி,10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3வது இடம் பிடித்தது.பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 -ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும், உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை