உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகருக்கு விஞ்ஞான் ரத்னா விருது

வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகருக்கு விஞ்ஞான் ரத்னா விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறையில் ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் தலைசிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அறிவியல் விருதுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான விஞ்ஞான் ஸ்ரீ விருது பெறுவோரின் பெயர்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாழ்நாள் சாதனைகள் படைத்தோருக்கு வழங்கப்படும், 'விஞ்ஞான் ரத்னா' விருது, சமீபத்தில் ம றைந்த வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, அவரது குடும்பத்தினரிடம் அளிக்கப்பட உள்ளது. இதேபோல், 'விஞ்ஞான் ஸ்ரீ' பிரிவின் கீழ் தமிழகத்தின் உயிரி அறிவியல் பிரிவு விஞ்ஞானி தங்கராஜ் உட்பட எட்டு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர இ ளம் விஞ்ஞானிகளின் திறனை ஊக்குவிக்கும் வகையில், 'விஞ்ஞான் யுவ' விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யின் இணை பேராசிரியராக உள்ள மோகனசங்கர் சிவப்பிரகாசம் உட்பட, 14 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அறிவியல் துறையில் குழுவாக செயல்பட்டு சிறந்த பங்களிப்பை அளிக்கும் அமைப்புக்கு, 'விஞ்ஞான் குழு' விருது வழங்கப்பட்டு வரு கிறது. நடப்பாண்டுக்கான இந்த விருது, ஜம்மு - காஷ்மீரில் லாவெண்டர் மிஷனை முன்னெடுத்த அரோமா மிஷன் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thirumal Kumaresan
அக் 26, 2025 09:38

அதிகமான விருதுகள் இறந்த பிறகு அறிவிக்க படுகிறது இது நல்ல உதாரணம் இல்லை . அதிகமாக உயிரோடு இளமையாக இருப்போருக்கு கொடுத்தால் அவர்கள் சந்தோச படுவார்கள். அதோடு அதிக ஈடுபாடு காண்பிப்பார்கள். மத்திய அரசு சிந்திக்கும் என நம்புகிறேன்


KOVAIKARAN
அக் 26, 2025 06:45

விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் நாட்டு நலனுக்காக மேலும் மேலும் பல அரிய சாதனைகள் செய்து மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள். வளர்க அகண்ட பாரதம்.


சமீபத்திய செய்தி