உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் பலி: 13 பேர் மாயம்

உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் பலி: 13 பேர் மாயம்

டேராடூன்: உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் மேகவெடிப்பு, நிலச்சரிவு, பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உத்தராகண்டில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டியது. டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hpsknuqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டேராடூனில் கல்வி நிறுவன வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்தது. 200 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் எட்டு மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 120 பேர் மீட்கப்பட்டனர். ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்தது. இருவர் மீட்கப்பட்டனர்; மூன்று பேர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Hindu
செப் 17, 2025 09:40

பீகாரின் இந்துமதம் மனிதனால் ஒரே ஒருபெண்ணாள் தகர்க்கப்பட்டுவிட்டது. இப்போது இயர்கையால் இந்துமதவாத புகலிடங்கள் தகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்துக்களின் சொத்துக்களையெல்லாம் நாட்டின் செல்வங்களையெல்லாம் நாடுகடத்தும் கும்பல் திருந்த இனியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது


Nation First
செப் 17, 2025 08:21

நதிக்கரைகளில் வீடுகள் ஹோட்டல்கள் மால்கள் பள்ளிகள் கோவில்கள் கட்டினால் இயற்கையின் சீற்றங்களுக்கு ஆளாகவேண்டும். உத்தரகாண்ட் ஹிமாச்சல் காஷ்மீர் பகுதிகளில் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் கட்டிடங்களை கட்டினால் அரசாங்கம் தடுக்க வேண்டும்


keerthi
செப் 17, 2025 08:13

கடவுள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை