உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தேடுதல் வேட்டை நடத்தி, நக்சல்களை ஒடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h3heyhd8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த போலீசார் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SUBBU,MADURAI
மே 21, 2025 13:22

தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட உயர்மட்ட நக்சல் தலைவரான பசவராஜ் உட்பட 30 க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். என்கவுண்டர் இன்னும் தொடர்கிறது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சொன்னது போல் நக்சல்கள் இல்லாத பாரதம் என்பது நடைமுறைக்கு வருகிறது.


SUBBU,MADURAI
மே 21, 2025 13:38

Amit shah wants to fulfill his Promise! He said...he will finish naxalism in india by 2026 and he is definitely working hard to achieve that feat by the proposed deadline China must be crying hard now.


V Venkatachalam
மே 21, 2025 18:10

தமிழ் நாட்டில் கொல்லைபுறத்தில் அரசியல் வியாதிகளின் அரவணைப்பில் துஷ்ட பிரசாரம் செய்து கொண்டிருக்கும் நக்ஸல்களை ஒழித்து கட்டினால் தான் நக்ஸல் இல்லா பாரதம் பார்க்க முடியும்.


சமீபத்திய செய்தி