உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ராணுவ தளங்களை கதறவிட்ட ஏ.டி.ஜி.எம்.,

பாகிஸ்தான் ராணுவ தளங்களை கதறவிட்ட ஏ.டி.ஜி.எம்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்ததும், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்து பாக்., ராணுவம் நம் மீது பீரங்கி தாக்குதலை தொடுத்தது. இதை தொடர்ந்து, ஏ.டி.ஜி.எம்., எனப்படும், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளை செலுத்தி, எல்லை பகுதியில் உள்ள பாக்., ராணுவ தளங்களை நம் படையினர் சின்னாபின்னமாக்கினர்.* ஏ.டி.ஜி.எம்., எனப்படும், பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை முற்றிலும் நவீனமானது.* ஏ.டி.ஜி.எம்.,கள், வடிவ மின்னூட்டம் எனப்படும் ஒன்றை பயன்படுத்துகின்றன. இது ஒரு சிறப்பு வகை வெடிபொருள். இது அதன் அனைத்து சக்தியையும் ஒரே திசையில் குவிப்பதால், தடினமான பீரங்கி கவசத்தை துளைக்கும் அளவுக்கு வலிமையானது.* இந்த ஏ.டி.ஜி.எம்.,களை, இரவு - பகல், அதிக குளிர், வெப்பம் என எந்த தட்பவெப்ப நிலையிலும் பயன்படுத்த முடியும்.* இந்த பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை தோளில் சுமந்தும், ஒரே இடத்தில் வைத்தும், வாகனம் அல்லது விமானங்களில் இருந்து செலுத்த முடியும்.* சில நவீன வகை ஏ.டி.ஜி.எம்.,கள் ஒன்றன்பின் ஒன்றாக இருமுறை தாக்கும் திறன் கொண்டவை. முதலில் வெளியேறும் ஏவுகணை, பீரங்கியின் வெளிப்புற பாதுகாப்பு கவசத்தை அழிக்கும். இரண்டாவதாக வெளியேறும் ஏவுகணை, பீரங்கியின் அடிப்புறம் உள்ள முக்கிய கவசத்தை தகர்க்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
மே 10, 2025 14:36

பத்து வருடம் டிஆர்டிஓ வை சரியாக வழிநடாத்தியதனால் வந்த நல்ல பலன். இது தொடர வேண்டும்.


saravanan
மே 10, 2025 13:39

சூப்பர்


Bhakt
மே 10, 2025 10:21

சீக்கிரம் பொறிக்கிஸ்தான் பாலைவனம் ஆகட்டும்...இங்கு இருக்கு பொறிக்கிஸ்தான் ஆதரவாளர்களை /உதார்வாளர்களை அங்கே குடி ஏற்றுவோம் .


Ganesh
மே 10, 2025 08:40

எப்படியோ பாகிஸ்தான் மூலமாக நம் நாட்டில் உள்ள எல்லா முக்கியமான ஆயுதங்களையும் சோதனை செய்ய வாய்ப்பு குடுத்து விட்டார்கள்... நம் குடியரசு தினது அன்று ஷோகேஸ் யில் பார்த்த ஆயுதங்கள் எல்லாம் வெடிக்க ஆரம்பித்து விட்டது... அது சரி பெரிய அண்ணனை நம்பிய சின்ன அண்ணன் வாயே திறக்க காணோம்?.. அவனுக்கும் கண்ணுல வியர்வை வந்திருக்கும் இப்பொழுது...


Dharmavaan
மே 10, 2025 20:07

திருடனுக்கு தேள் கொட்டியது போல சீனா சாயம் வெளுத்துவிட்டது.இனிமேல் அதுவும் வாலை சுருட்டி இருக்கும் .இதே மௌனசிங் காலத்தில் சீனா மிரட்டினால் போதும் மௌனன சிங் ,பசி ,அந்தோணி மூத்திரம் விட்டுக்கொண்டு சீனா காலில் விழுந்திருப்பான்கள் பேடிகள்


Barakat Ali
மே 10, 2025 07:15

ஆஹா ......


சமீபத்திய செய்தி