உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபையில் கூச்சல், குழப்பம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

சட்டசபையில் கூச்சல், குழப்பம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை கூட்டத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரை இன்று (பிப்.,25) ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.டில்லியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், 27 ஆண்டுகளுக்கு பின் பெரும்பான்மை இடங்களை பெற்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். புதிய எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி 8வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (பிப்.,25) கூடியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g4hj5kd0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய எம்.எல்.ஏ.,க்கள் காலை 11 மணிக்கு பதவியேற்றனர். கூட்டத்தொடரில் மதுபான கொள்கை தொடர்பாக சி.ஏ.ஜி., அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவத்து ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர், எதிர்க்கட்சி தலைவர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரை இன்று (பிப்.,25) ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.சட்டசபைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

c.mohanraj raj
பிப் 25, 2025 23:06

அவர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பலாம் தவறே இல்லை


sankaranarayanan
பிப் 25, 2025 20:33

எல்லாருமே மது அருந்த போயிருப்பார்கள் அவர்கள் திரும்ப வந்தால் போதையுடன் தான் வருவார்கள்.ஜாக்கிரதை அவர்களை உள்ளே விட்டால் கலாட்டாதான் நடக்கும்.


Rajan A
பிப் 25, 2025 17:36

இந்த கட்சியை கலைக்க உத்தரவிட வேண்டும்


Raman
பிப் 25, 2025 13:10

Pl suspend them till 2031.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை