உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்காஜியில் துணை ராணுவப்படை குவிப்பு அடுத்த இடிப்பு அங்கே தான் என்கிறார் அதிஷி

கல்காஜியில் துணை ராணுவப்படை குவிப்பு அடுத்த இடிப்பு அங்கே தான் என்கிறார் அதிஷி

புதுடில்லி:''கல்காஜி குடிசைப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கிருந்து அப்பாவி மக்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளனர்,'' என, டில்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறினார்.டில்லி முதல்வராக இருப்பவர், பா.ஜ.,வைச் சேர்ந்த ரேகா குப்தா. அவர், கடந்த ஞாயிறு அன்றும், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதில், 'அதிகாரிகள் யாரும், குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றக் கூடாது' என்றார்.எனினும், பல பகுதிகளில் குடிசைப்பகுதிகள் அகற்றப்படுகின்றன. இதனால், முதல்வரின் பேச்சை, அதிகாரிகள் கேட்பதில்லையோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இப்படித் தான், தெற்கு டில்லியின் பாரபுல்லா அருகே உள்ள மதராசி கேம்ப் மற்றும் சில இடங்களில் நடந்தது.இப்போது, கல்காஜி அருகே மூன்றாவது முறையாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை அந்த பகுதியில் இருந்த குடிசைகள் தகர்க்கப்பட்டு, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக, அந்த குடிசை வீடுகள் அகற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கு ஏற்ப, அந்த பகுதியில் ஏராளமான, மத்திய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அதிஷி நேற்று கூறியதாவது:முதல்வர் ரேகா குப்தா, சொல் ஒன்று, செயல் வேறாக உள்ளது. அவர், குடிசைப்பகுதிகளை அகற்ற மாட்டேன் என்கிறார். ஆனால், பல குடிசைப் பகுதிகளில் இருந்து அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.அதுபோலத் தான், இப்போது கல்காஜி என்ற இடத்திலும் நடக்கிறது. இப்போதும், கடந்த ஞாயிறு அன்று, முதல்வர் ரேகா குப்தா, குடிசைப்பகுதிகள் அகற்றப்பட மாட்டாது என்றார். ஆனால், அந்த பகுதியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதை பார்க்கும் போது, அடுத்த இடி கல்கானி பகுதியில் உள்ள ஜே.ஜே., கேம்ப் பகுதியாகத் தான் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி