உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல்; வழக்கு பதிந்தது என்.ஐ.ஏ.,

கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல்; வழக்கு பதிந்தது என்.ஐ.ஏ.,

பிளை துபாய் விமானத்தில் கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது ஓமன் துணை விமானி தாக்குதல் நடத்தியது குறித்து என்.ஐ.ஏ., வழக்கு பதிந்துள்ளது.விமானத்தை கடத்திச்சென்று, தரையில் மோதச் செய்து பயணிகளை கொல்லும் ஓமன் துணை விமானியின் பயங்கர சதியை கேப்டன் ஸ்மிட் மச்சார் முறியடித்தார். இதில், பயணிகள் 174 பேர் காப்பாற்றப்பட்டனர்.படுகாயம் அடைந்த ஸ்மிட் மச்சார் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது தீரச் செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், ஓமன் துணை விமானியின் செயல் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கும்படி என்.ஐ.ஏ.,வுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர். சர்வதேச அளவிலான பயங்கர சதியின் முழுமையான விவரங்களை கண்டறியும் நோக்கத்துடன் இந்த விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh Velan
அக் 10, 2026 20:55

என்ன வழக்கு , என்ன விசாரணை ? இந்த ஆளு ஆஸ்பத்திரியில் துடி துடித்து கொண்டிருக்கிறார் , அந்த கேடு கெட்டவன் சுகமாக வழக்கு விசாரணைக்கு போக போகிறார் ? இது என்ன கேடு கெட்ட ஜனநாயகம் , சவம் அந்த ஓமான் நாட்டு தீவிரவாதியை அணு அணுவாக சித்திரவதை செய்து துண்டு துண்டாக வெட்டி , வெட்டும் பொது வீடியோ எடுத்து அதை லைவ் ஆக ஓளி பரப்பி கொல்ல வேண்டாமா ? அப்படி பட்ட சட்டம் வராத வரை இந்த உலகம் உருப்படாது ? திரும்ப திரும்ப தீவிரவாதி நாய்கள் இதையே தான் செய்யும் , சட்டம் கடுமையாக இல்லையே , விளங்குமா உலகம்


சிவா
அக் 10, 2026 17:30

நல்ல முடிவு செய்துள்ளது NIA.