உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா, ராகுல் கண்டனம்

தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா, ராகுல் கண்டனம்

சென்னை: '' சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி சோனியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தாக்க முயன்றார். கவாய் மீது காலணியை வீச முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ராஜேஷ் கிஷோரை, சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இச்சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தலைமை நீதிபதி வெளிப்படுத்திய கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மை நீதித்துறை அமைப்பின் வலிமையை காட்டுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தி இருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது நிறுவனங்களை மதித்து பாதுகாக்கும் மற்றும் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சோனியா கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கவாய் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இது அவர் மீதான தாக்குதல் அல்ல. அரசியலமைப்பு மீதான தாக்குதல். கவாய் கருணை உள்ளவர். இந்த நேரத்தில் தேசம் அவருக்க ஆதரவாக உறுதியுடன் நிற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ' தலைமை நீதிபதி மீதான தாக்குதல் என்பது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் ஆன்மா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதுபோன்ற வெறுப்பு சம்பவங்களுக்கு இந்தியாவில் இடமில்லை. இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

M Ramachandran
அக் 07, 2025 00:54

சோயானீயா கண்டனம். ஏன் ரவுசு ராவுலு தலை மறைவா இல்லை எட்டப்பன் வேலைக்காக திருட்டு தனமா கள்ள தோணியில் சென்று வெளி நாட்டில் சாப்பிட ஜரூரா போயாச்சா?


Raj
அக் 07, 2025 00:19

திராவிட கழகத்தின் உறுப்பினராக இருக்கப் போகிறான்.


Kanthamaran
அக் 06, 2025 22:26

நமது முதல்வர் கூறிய அடக்குமுறை அதிகாரவர்க்கம் போன்ற செயல்கள் இங்கு தமிழ்நாட்டில் அதுதான் நடந்துக்கொண்டு இருக்கிறது. இவர் டெல்லியில் போய் நியாயம் பேசுகிறார்.


Rajan A
அக் 06, 2025 21:56

பெயில் கொடுத்த மகராஜன்.


Rajan A
அக் 06, 2025 21:55

இன்னும் 6 மாசம் தான்


Madhavan
அக் 06, 2025 21:07

தமிழகத்தில் . பிரபல வழக்கறிஞரை முன்னாள் பெண் முதலமைச்சரும் அவரது தோழியும் தாக்கியதாக வந்த செய்தி நினைவுக்கு வருகிறது.


R. SUKUMAR CHEZHIAN
அக் 06, 2025 21:04

கவாய் அசிங்க படுத்தியது இந்து சனாதன தர்மத்தை இதுவே அரேபிய மதத்தையோ ஐரோப்பிய மதத்தை அசிங்க படுத்தி நக்கலாக பேசியிருந்தால் இந்த செக்யூலர் கும்பல்கள் அப்படியே பிலேட்டை மாத்தி பேசியிருக்கும்.


Sivaram
அக் 06, 2025 20:42

நீதி அரசர் மீது என்ன ஒரு அக்கறை இவர் சொல்வதை நம்பும் ஒரு கொத்தடிமை தலைவன்கள் ஒன்றுமே புரியாத ஒரு கூட்டம் உடன்பிறப்புகள்


spr
அக் 06, 2025 20:30

நீதிபதியின் மேல் செருப்பை வீசியது குற்றமே ஆனால் அதைக் கூட இந்த நபரால் சரியாகச் செய்ய முடியவில்லை. போகட்டும் ஆனால் எப்போதோ உடைந்து போன ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே உள்ள ஒரு சிலையின் தலையை சீர் செய்ய வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது விளம்பரத்திற்காகவே இது போல பல இடங்களில் சிலைகள் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்டால் இது தொடர்கதையாகும். நீதிபதி "இது இன்று நேற்று நடந்த ஒன்றல்ல பல ஆண்டுகளாக இருந்த ஒன்று. அந்த இடம் மக்கள் தொழுகின்ற கோயிலும் அல்ல.. காட்சிப் பொருளாக தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களே தீர்மானிக்க வேண்டியது" என்று மட்டுமே கூறியிருந்தால் அவரைப் பாராட்டலாம் அதை விடுத்து " அதை உங்க கடவுளிடம் கேளுங்கள்" என்று கழகப் பாணியில் கூறியதே தவறு. இதை ஏன் எவரும் குறை சொல்லவில்லை


V Venkatachalam
அக் 06, 2025 20:00

எனக்கு சூப்பர் கோர்ட்டில் கவுனரை எதிர்த்து கேஸ் இருக்கு. அப்பறம் தற்குறி விஜய் கேஸ் இருக்கு. என்னதான் அஸ்ரா சாமார்த்தியமா விசாரித்தாலும் உண்மை கசிஞ்சிடும்.எங்களூக்கு தொடர்ந்து படி அளக்குறவன் மாட்டிக்குற சூழ்நிலை வந்துடும்.அப்ப சூப்பர் கோர்ட்டுக்கு நான் வந்து ஆகணும். அதுக்கெல்லாம் சேர்த்து தான் இந்த கண்டணம்.ஆட்சி போறதுக்கு முன்னாடி இந்த கேஸ் எல்லாம் வின் பண்ணியாகணும்.. இந்த சமயத்துல செ.பா கருத்து நீக்கம் கேஸு ஊத்திகிச்சு.அதுக்காகவும் நான் காவாய் கிட்ட போகணும்.எனக்குன்னு கடைசி காலத்தில் சோதனை மேல் சோதனை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை