உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு

இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொகோடா: '' ஜனநாயகம் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதே இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசினார்.கொலம்பியா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் அங்குள்ள இஐஏ பல்கலையில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். அதேநேரத்தில் சீனாவை விட முற்றிலும் மாறான அமைப்பு இந்தியாவில் உள்ளது. மையப்படுத்தப்பட்ட அமைப்பை கொண்டதாகவும் சீனா உள்ளது. இந்தியாவோ பரவலாக்கப்பட்டதாகவும், பல மொழிகள், கலாசாரங்கள், மரபுகள் மற்றும் மதங்களை கொண்ட அமைப்பாக உள்ளது. மிகவும் சிக்கலான அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.இந்தியா பல சவால்களில் இருந்து வெளியே வர வேண்டியுள்ளது. அனைத்து திசைகளில் இருந்தும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய சவால் ஆகும். பலவகையான பாரம்பரியம், மதம் மற்றும் கொள்கைகளுக்கு உரிய இடம் தேவை. இந்த இடத்தை உருவாக்கும் சிறந்த முறையை கொண்ட அமைப்பே ஜனநாயக அமைப்பு. ஆனால், இந்தியாவில்அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சீனா செய்வதை போல் நாம் செய்ய முடியாது. மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை சீனா நடத்துகிறது. அந்த மாதிரியை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.சீனாவுக்கு அண்டை நாடாகவும், அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா இருக்கிறது. பெரிய சக்திகள் மோதிக்கொள்ளும் இடத்திற்கு நடுவில் நாம் இருக்கிறோம். பொருளாதார ரீதியில் நாம் வளர்ந்தாலும், நாம் சேவை சார்ந்த பொருளாதாரம் மற்றும் உற்பத்தி செய்ய முடியாததால் அதிகளவில் வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க முடியவில்லை. அமெரிக்காவில் உற்பத்தி துறையில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். ஜனநாயகமற்ற சூழலில் சீனா தனது உற்பத்தி திறனை நிரூபித்துள்ளது. ஆனால், நமக்கு ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. எனவே சீனாவுடன் போட்டி போடக்கூடிய ஒரு ஜனநாயக சூழலில் உற்பத்தி மாதிரியை உருவாக்குவதே நமக்கு உள்ள மிகப்பெரிய சவால். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

bharathi
அக் 03, 2025 14:27

Yes !!! by Congress brutas


naranam
அக் 03, 2025 06:08

இவனொரு புலம்பல் புரூட்டஸ்! உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவையும் இந்தியரையும் அவமானப் படுத்துவது ஒன்றே இவனது குறிக்கோள்.


naranam
அக் 03, 2025 05:36

ஐயோ இவரு புலம்ப ஆரம்பித்து விட்டார். அப்படி என்றால் அடுத்து வரும் தேர்தலில் இவருக்கு தோல்வி நிச்சயம் என்பது அவருக்கும் உறுதிபடத் தெரிந்து விட்டது என்றே அர்த்தம்.


Priyan Vadanad
அக் 02, 2025 22:59

இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு எந்த காலத்திலும் ராகுலால் பாரதீதீதீய கட்சியை ஜெயிக்க முடியாதென்பதை உணர்ந்துவிட்ட வாக்குமூலம் அல்லது புலம்பல்.


vivek
அக் 03, 2025 05:39

நீ இங்கு சொல்வதை போல அவர் அங்கு சொல்கிறார் பிரியன்


Ramesh Sargam
அக் 02, 2025 22:52

இந்தியாவைப்பற்றி எப்பொழுதும் குறைகள் சொல்லித்திரியும், குறிப்பாக வெளிநாடுகளில் நம் தாய் நாட்டைப்பற்றி அவதூறாக பேசுவது கொலைக்குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைவிட மிகப்பெரிய குற்றம். ஆகையால் ராகுல் காந்திக்கு நாட்டின் அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.


ராமகிருஷ்ணன்
அக் 02, 2025 22:12

நீங்க எப்படிப்பட்ட பொய்களை சொன்னாலும் அந்த நாட்டு மக்கள் சிந்திக்க மாட்டார்களா. உலக பொருளாதாரத்தில் 4 வது இடத்தை பி ஜே பி அரசுதான் கொண்டு வந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு மோசமான ஊழல் ஆட்சி நடந்தது என்று உலக மக்களுக்கு தெரியும். மற்ற நாட்டு மக்களிடம் அவமானபட போகிறார்.


D Natarajan
அக் 02, 2025 22:04

இந்த பைத்தியத்தை உடனடியாக கில்பாக் மனநிலை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.


srinivasan
அக் 02, 2025 21:58

இப்படி பேச வைத்திருப்பதிலேயே இந்திய ஜனநாயகத் தைப் பற்றி புரிந்து கொண்டு இருப்பார்கள்


Suppan
அக் 02, 2025 21:58

இந்த ஆசாமியை காங்கிரஸ்காரர்கள் எப்படி தலைவனாக ஏற்கிறார்கள்?


Nanchilguru
அக் 02, 2025 21:37

இன்னும் வெள்ளைக்காரனுக்கு அடிமை போல , அதே அடிமை தனமான பேச்சு


சமீபத்திய செய்தி