| ADDED : ஜூன் 13, 2025 10:17 AM
புதுடில்லி: வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு இடைக்கால அரசுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் நடந்த மாணவர் எழுச்சி போராட்டத்திற்கு பிறகு, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=loa0uhim&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், சிராஜ்கஞ்ச் மாவட்டம் ஷாஜாத்பூரில் அமைந்துள்ள ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக வீடு, வங்கதேச அரசால் அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வாகன நிறுத்த கட்டணம் தொடர்பாக பார்வையாளர் ஒருவருக்கும், அங்குள்ள ஊழியருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர் தாக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். அதில், ஒரு கும்பல் அருங்காட்சியகத்தை சேதப்படுத்தியது. இந்த நிலையில், ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு இடைக்கால அரசுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது; சர்வதேச விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் ரவீந்திரநாத் தாகூரைப் பொறுத்தவரையில் பா.ஜ., மிகவும் உணர்வுபூர்வமாகவும், தீவிரமாகவும் எடுத்துக்கொள்கிறது. வங்கதேசத்தில் உள்ள அவரது பூர்வீக வீடு தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஜமாத்தே-இ- இஸ்லாமி மற்றும் ஹெபாஜத்-எ-இஸ்லாம் போன்ற குழுக்கள் ஈடுபட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரத்தில் வங்கதேச அரசு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது அதிருப்தியளிக்கிறது, எனக் கூறினார்.