வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Karma haunts.
அடுத்து சர்ச் மசூதி தொடர்பான வழக்கு வரும் போது இதே பதிலை அவரும் சொல்ல வேண்டும்
புதுடில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் உடையில் இருந்த நபர் காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல விசாரணை பணிகள் துவங்கின. அப்போது வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்த நபர் ஒருவர், திடீரென எழுந்து, 'சனாதன தர்மத்தை அவமதித்தால் இந்த நாடு சகித்துக் கொள்ளாது' என, கூச்சலிட்டபடியே, தன் காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி எறிய முயன்றார். அப்போது, அருகில் இருந்த காவலர்கள், உடனடியாக அதை கவனித்து, அந்த நபரை மடக்கி பிடித்து, வெளியே இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதே சமயம், இதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி கவாய், வழக்கறிஞர்களை நோக்கி வாதங்களை துவங்கும்படி பணித்தார். மேலும், ''இவற்றால் கவனத்தை சிதறவிடக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னை பாதிக்காது,'' என்றார்.
மத்திய பிரதேசத்தில், 'யுனெஸ்கோ' அமைப்பால் புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஜாவேரி கோவிலில் இருந்த ஏழு அடி உயர விஷ்ணு சிலையை, சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். அந்த சிலையை சீரமைக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'விஷ்ணு மீது உண்மையிலேயே பக்தி இருந்தால், சிலையை சீர்படுத்தக் கோரி, அவரிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 'சிலையை சீர்படுத்தும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் இல்லை' என கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அனைத்து மதத்தின் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடனடியாக விளக்கமும் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நபர், தலைமை நீதிபதியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
Karma haunts.
அடுத்து சர்ச் மசூதி தொடர்பான வழக்கு வரும் போது இதே பதிலை அவரும் சொல்ல வேண்டும்