உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.டி.ரவியை தாக்க முயற்சி

சி.டி.ரவியை தாக்க முயற்சி

பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், டிசம்பர் 9 முதல் 19ம் தேதி வரை, சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது.கடைசி நாளில் மேல்சபையில் வைத்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாச வார்த்தையால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வெகுண்டு எழுந்த லட்சுமியின் ஆதரவாளர்கள் சுவர்ண விதான் சவுதாவில் புகுந்து, ரவியை தாக்க முயன்றனர். லட்சுமி அளித்த புகாரில் ரவியை, ஹிரேபாகேவாடி போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணை என்ற பெயரில், இரவு முழுதும் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக அழைத்து சென்றனர். தன்னை 'என்கவுன்டர்' செய்ய போலீசார் முயற்சித்தனர் என்று ரவி கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுநாளே ரவி விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை