உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி: அமித்ஷா

தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள்,'' என லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதை திமுக அரசு எதிர்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yhru0rk9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 தற்போது நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டு வர வலியுறுத்தும் நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு அதில் 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதை கனிமொழி தலைமையில் பிரியங்கா உள்ளிட்ட சில எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கினர்.இந்நிலையில் லோக்சபாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா இது குறித்து பேசும்போது, 'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள்' என குற்றம் சாட்டினார்.இதற்கு தமிழக எம்பிக்கள் கோஷம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Kasimani Baskaran
டிச 11, 2025 04:29

திராவிடம் என்ற ஓர் கட்டமைக்கப்பட்ட பிம்பம் சாமிநாதன் ஏற்றி வைக்கப்போகிர தீபத்தால் தீக்கிரையாகப்போகிறது என்று யாருக்கோ முருகன் கனவில் வந்து சொல்லியிருக்கிறான். என்று வேலை எடுத்தார்களோ அன்றே திராவிடம் அழியப் போகிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு தவணை ஆட்சியை முருகன் கொடுத்தான். பொறுப்பில்லாமல் செய்ததால் ஏராளமான சிக்கல்கள் - இனி திராவிடத்துக்கு வாய்ப்பில்லை.


SULLAN
டிச 11, 2025 11:29

பகல் கனவு பலிக்காது


S. Venugopal
டிச 10, 2025 22:47

அன்று மதுரையில் கண்ணகிக்கு அநீதி இழைத்த பாண்டியனின் சிம்மாசனம் கவிழ்ந்தது மதுரை தீக்கு இரையானது இன்று அதே மதுரையில் தீபம் ஏற்ற கொடுத்த நீதியினை மறுக்க தீயினால் உருவாக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம் தில்லி உச்ச நீதிமன்றம் மற்றும் நீதி வழங்கிய நீதிஅரசரை பதவியிலிருந்து அகற்ற பாராளுமன்றம் செல்பவர்கள் அறியணை நிலைக்குமா?


Kasimani Baskaran
டிச 11, 2025 03:45

என்று வேலை கையில் எடுத்தார்களோ அன்றே திராவிடம் முடிஞ்..


theruvasagan
டிச 10, 2025 22:20

நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயல்வது கிடக்கட்டும். இவங்க சொல்லுகிற சொத்தை காரணத்தை வைத்து ஒரு கீழமை நீதிமன்ற டவாலியை கூட நகர்த்த முடியாது.


Aameena Aafira
டிச 10, 2025 22:19

சட்டம் வடிவம்தான் நீதி அந்த சட்டம் வேர் முதல் நுனி வரை? ஆராய்ந்து தீர்ப்பளித்தால் நன்மை மனதிற்கு சாதக தீர்ப்பை தான் சுய உண்மை உணர்ந்த மக்கள் எதிர்க்கிறார்கள்


NALAM VIRUMBI
டிச 10, 2025 21:53

ஊழல்களில் மூழ்கித் திளைக்கும் தீய திமுக நியாயமாக செயல்பட்ட நீதிபதிக்கு எதிராக அப்பட்டமாக முயல்கிறது என்றால் அதற்கு காரணம் கையாலாகாத இந்துக்களே அல்லவா? எப்போது விழிப்பீர்கள்? " எழுமின் விழிமின்" முதலில் உன் வழிபாட்டுத் தலங்களை காப்பாற்று. உனக்கு மன அமைதி தரும் இடம் கோவில் மட்டும் தான் என்பதை மறந்து விடாதே


தாமரை மலர்கிறது
டிச 10, 2025 21:32

திமுக சொல்வதை கேட்டு, ஹை கோர்ட் நீதிபதியிலிருந்து பதவி நீக்கம் கொடுத்து, சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக அமர்த்துங்கள்.


C S K
டிச 11, 2025 04:02

சரியான பார்வை


Veluvenkatesh
டிச 10, 2025 20:19

இந்த கூட்டத்தை ஒழித்துக்கட்ட வரும் 2026 தேர்தல் மிக சிறந்த வாய்ப்பு. மக்களே முழிச்சிகோங்க. ஒழிந்தால் ஆன்மிகம் தழைக்கும்-தமிழகம் முன்னேறும்.


சூர்யா
டிச 10, 2025 20:02

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றச் சொன்னதற்குதானே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி விலகச் சொல்கிறார்கள்! இது உண்மைதானே! அதைத்தானே அமித்ஷா சுட்டி காட்டி உள்ளார். இதற்கு எதற்கு எதிர் கட்சியினர் கூச்சல்?


எஸ் எஸ்
டிச 10, 2025 19:59

இனிமேலும் திமுகவுக்கு ஹிந்துக்கள் ஓட்டு போட்டால் அந்த பாவத்தை அவர்கள் மட்டும் அல்ல அவர்கள் தலைமுறைகளும் அனுபவிக்கும்


Ram
டிச 10, 2025 19:49

தமிழ் நாட்டில் மட்டுமே இந்துக்கள் மைனாரிடி ஆக நடத்தபடுகிறார்கள் இங்கு ஒரு நீதிபதி என்ன தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று போலி முகமூடி சமூக நீதி காவலர்கள் எப்படி கூற முடியும்


புதிய வீடியோ