உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு: உ.பி., போலீஸ் கொடுத்த அதிர்ச்சி

10 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு: உ.பி., போலீஸ் கொடுத்த அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எட்டாவா: உ.பி.,யில் 10 வயது சிறுவன் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் கொலை முயற்சி மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜிதாரா நகரில் குழாய் அமைப்பதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இது தொடர்பாக இரு பிரிவினரும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தான் 6வது படிக்கும் 10 வயது சிறுவன் உட்பட சிலர் மீது கலவரத்தில் ஈடுபடுதல், அமைதியை கெடுத்தல், வீடுகளை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, கிரிமினல் நோக்கம், பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கூறுகையில், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். எங்களது புகாரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றனர் . இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்த அவர்கள், போலீசார் எந்தவித விசாரணையும் நடத்தாமல் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினர்.போலீசார் கூறுகையில், புகாரில் சிறுவனின் வயது குறிப்பிடப்படாததால், அவரின் பெயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உரிய விசாரணைக்கு பிறகு வழக்கில் இருந்து அவரின் பெயர் நீக்கப்படும் என்றனர்.மத்திய அரசின் புதிய சட்டப்படி, போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய பிறகு தான் வழக்குப்பதிய வேண்டும் எனக்கூறும் சட்ட வல்லுநர்கள், சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ததை வைத்து பார்க்கும் போது உண்மையை கண்டறியாமல் அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது எனவும் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ganapathy
செப் 22, 2024 22:35

இஸ்லாமிய தீவிரவாதத்தில் பெண்களையும் சிறுவர்களையும் உபயோகப்படுத்துவது ஜிஹாத்தின் ஒரு பகுதியே. இஸ்ரேலை இதில் நாம் பின்பற்ற வேண்டும். அவனுக்கு தீவிரவாத சிந்தனையை ஸனாதிகளை கொலை செய்யும் எண்ணத்தை ஊட்டிய முல்லாபயலுகளை தண்டிக்க வேண்டும். இதில் மனித உரிமை பார்த்து இஸ்லாமிய தீவிரவாதத்தை மறைத்து காப்பாற்றும் செகுலர் அறிவீலிகளை புறக்கணிக்க வேண்டும்


Kanns
செப் 22, 2024 21:56

Why Not Possible. All SoCalled Weak People /VoteHungry Politicians/ NewsHungry Media/ CaseHungry Criminals are Doing Grave Crimes


ديفيد رافائيل
செப் 22, 2024 18:40

Police க்கு மனசாட்சி இல்லையா? எந்த Police இப்படி செய்தார் தெரியல.


venugopal s
செப் 22, 2024 18:16

நல்லவேளை, சிறுவன் மீது புல்டோசரை ஏற்றாமல் விட்டார்களே,அது வரை சந்தோஷம்!


rama adhavan
செப் 22, 2024 21:05

... விஷ நாட்டில் நடக்கலாம்.


புதிய வீடியோ