உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேன்சி பதிவு எண்கள் ஏலம் அரசுக்கு ரூ.80 லட்சம் வருவாய்

பேன்சி பதிவு எண்கள் ஏலம் அரசுக்கு ரூ.80 லட்சம் வருவாய்

பெங்களூரு: வாகன பதிவு பேன்சி எண்களை ஏலம் விட்டதில், மாநில அரசுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக 0001 என்ற எண் 4.35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.இது குறித்து, போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியின் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று (முன் தினம்) பதிவு எண்கள் ஏலம் விடப்பட்டன. மொத்தம் 62 பேன்சி எண்கள் ஏலத்தில் வைக்கப்பட்டன. ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது. வாகன உரிமையாளர்கள், விருப்பமான எண்களை பெற்றனர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.மதியம் 12:00 மணிக்கு துவங்கிய ஏலம், மூன்று மணி நேரம் நடந்தது. கேஏ - 51 - எம்ஒய் எண் 0001 என்ற எண் 4.35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. 1, 0001, 0027, 0999, 0099, 0555, 0333, 4444, 6666, 1111, 7777, 8888, 8055, 2727, 3333, 5999, 9999, 9099, 4599 உட்பட பல பேன்சி எண்களை வாங்குவதில், வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர்.மொத்தம் ஒன்பது பேன்சி எண்கள் மட்டுமே ஏலம் போனது. பேன்சி பதிவு எண்களை ஏலம் விட்டதில், அரசுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ