உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனவுகளுடன் லண்டன் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் மகள் பலி

கனவுகளுடன் லண்டன் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் மகள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குஜராத்தின் ஹிமத் நகரைச் சேர்ந்த இளம்பெண் பாயல். அவரது தந்தை சுரேஷ் காதிக் லோடு; ஆட்டோ டிரைவர். சிறு வயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய பாயல், ராஜஸ்தானின் உதய்பூரில் பி.டெக்., படிப்பை முடித்துவிட்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் படிக்க விரும்பினார். அதற்காக லண்டன் செல்ல விரும்பினார்.மகள் வெளிநாடு சென்று படித்து வேலைக்குச் சென்றால், குடும்ப வறுமை தீரும் என்று பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ஏற்பாடு செய்தார் தந்தை சுரேஷ். அவர் குடும்பத்தில் வெளிநாடு சென்று படிக்கும் முதல் நபர் பாயல்.காலை 10:00 மணிக்கே விமான நிலையம் சென்ற பாயல் குடும்பத்தினர், அவரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினர். லண்டன் சென்று படிப்பில் சிறந்து விளங்குவார் என நம்பிக்கையுடன் திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'ஏர் இந்தியா' விமான விபத்தில் பாயல் உயிர் இழந்தார். சுரேஷ் குடும்பத்தினரின் கனவு தகர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூன் 15, 2025 06:47

ஏழைகள் வெளிநாட்டில் பிள்ளைகளை படிக்க அனுப்புவது அவ்வளவு எளிதல்ல. சொத்து சுகங்களை இழந்து அனுப்பவேண்டும். அதன் பின்னரும் சுபிட்சம் வராமல் இப்படி ஓர் சோகம்.. ஆழ்ந்த இரங்கல்கள்.


Natarajan Ramanathan
ஜூன் 15, 2025 06:34

வருத்தமான செய்திதான். ஆனாலும் நஷ்டஈடாக வரும் ஒரு கோடியே இருபத்து ஐந்து லட்சத்தில் கடன்களை அடைத்து இளைய மகளை நன்கு படிக்க வையுங்கள்.


Padmasridharan
ஜூன் 15, 2025 04:12

அதிகார நிறுவனம், ஒரு கோடி ௹ தந்தால் குடும்ப வறுமை தீர்ந்துவிடும் என்று தரப்போகிறார்களே. சாமி . சம்பாதிச்சாலும் எளிதில் வராத லட்சங்கள், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ௹ தர்ற அதிகாரம்தானே


kalyanasundaram
ஜூன் 15, 2025 03:30

This is the ripe time for these papoo and group to make hue and cry that only MODIJI is the only cause for this air crash


சமீபத்திய செய்தி