உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரலை ஒளிபரப்பை தவிர்த்திடுங்க; ஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்

நேரலை ஒளிபரப்பை தவிர்த்திடுங்க; ஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும் கள செயல்பாடுகளை நேரலை செய்வதை ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; பாதுகாப்புத்துறையினர் மேற்கொள்ளும் ஆபரேஷன்கள் மற்றம் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் ஒளிபரப்புவதை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் தனிநபர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற முக்கிய நடவடிக்கைகளை நேரலையில் வெளியிடுவதன் மூலம், ராணுவத்தின் செயல்திறன் பாதிக்கப்படுவதுடன், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலையும் உண்டாக்கும். கடந்த காலங்களில் நடந்த கார்கில் போர், மும்பை தாக்குதல் மற்றும் கந்தஹர் விமானக் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுபோன்ற செய்தி வெளியீட்டினால் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. எனவே, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, அதுபற்றி விளக்கங்களை கொடுப்பார். அனைவரும் தங்களின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சுந்தர்
மே 10, 2025 05:32

ம்ம்ம்...எப்போதும் நேரலைதான்... ப்ரேக்கிங் நியூஸ்தான்....போர் சூழலில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.


sampath, k
மே 09, 2025 19:35

All Indians should know their responsibility and act accordingly. Our brothers and sisters are safe guarding our country from Pakistan. We salute and respect them each and every manner without giving any trouble to them by commenting unnecessary till war is over.


M S RAGHUNATHAN
மே 09, 2025 19:28

மிக சரியான அறிவுறுத்தல். நடவடிக்கை. அதுபோல் இங்கு உள்ள சில ஊடகங்களையும், தனியார் வலைத் தலைகளையும் , ஆதாரம் இல்லாமல் பேசும் ஊடக பேச்சாளர்களையும் தடை செய்ய வேண்டும். அத்து மீறினால் உடன் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் குறைந்தது 2 வருடங்கள் வைக்க வேண்டும்.


rama adhavan
மே 09, 2025 17:48

மீடியாகளுக்கு சென்சார் இப்போது கட்டாயம். காட்டுப்பாடாற்ற மீடியாக்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள். உடன் பிறந்தே கொல்லும் வியாதி அவர்கள்.


V Venkatachalam
மே 09, 2025 16:12

மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் மென்மையான அறிவுரை. இந்த சந்தர்ப்பத்தில் மென்மையே கூடாது. எட்டப்பன்கள், கழுகு இரை தேடுவது போல் அலைகிறான்கள். அவன்களுக்கு துளி கூட இடம் கொடுக்க கூடாது.


SP
மே 09, 2025 15:55

அறிவுறுத்தல் எல்லாம் தமிழக ஊடகங்களுக்கு சரி வராது அதிரடிதான் சரி வரும்


சத்யநாராயணன்
மே 09, 2025 14:45

அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்


புதிய வீடியோ