வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த முறையான OTP முறை எப்பவோ கொண்டு வந்துட்டாங்க. இது உங்களுக்கு ரொம்ப late news
புதுடில்லி : சைபர் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக, ஓ.டி.பி., அனுப்பும் முறையில், ஆக்சிஸ் வங்கி புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கமாக குறுஞ்செய்தி வாயிலாகவே, ஓ.டி.பி., அனுப்பப்படுகிறது. இதற்கு தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில், தொலைதொடர்பு நிறுவனங்களின் வழியாக இல்லாமல், ஆக்சிஸ் வங்கியின் இணைய வங்கி செயலியான, 'ஓபன்' செயலியிலேயே ஓ.டி.பி., அனுப்பும் நடைமுறையை அந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயனர்களுக்கு செயலியிலேயே குறிப்பிட்ட கால அவகாசம் வரை செல்லுபடியாகும், ஓ.டி.பி., அனுப்பப்படும். பயனர்கள் ஓ.டி.பி.,யை பெற்றதும், வழக்கம் போல அதை உள்ளிட்டு, தங்களது வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். செயலியில் உள்நுழைவதற்கு மட்டுமின்றி, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்குமே, இவ்வாறு ஓ.டி.பி.,யை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஓ.டி.பி., தொடர்பான மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வங்கி சேவைகளை மேற்கொள்வதற்கு இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த முறையான OTP முறை எப்பவோ கொண்டு வந்துட்டாங்க. இது உங்களுக்கு ரொம்ப late news