உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசமான விளைவு!

மோசமான விளைவு!

பார்லிமென்ட், சட்டசபை ஆகியவை விவாதங்களுக்கான இடங்கள். அரசியல் ஆதாயத்துக்காக அவற்றை அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல. சபையின் கண்ணியம் சமரசம் செய்யப்படும் போது, நாடு மோசமான விளைவுகளை சந்திக்கிறது. அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

அதிகார திருட்டு!

ஓட்டு திருட்டைத் தொடர்ந்து, பதவி பறிப்பு மசோதாவை அறிமுகப்படு த்தி, அதிகார திருட்டில் மத்திய பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை கைது செய்வதை ஆயுதமாக பயன்படுத்தி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்

ஒற்றுமையாக உள்ளோம்!

பீஹாரில் 'இண்டி' கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதால், சட்டசபை தேர்தல் முடிவுகள் பயனுள்ள வகையில் இருக்கும். அரசியல் மற்றும் சித்தாந்த ரீ தியாக இணைந்து ள்ள நாங்கள், அனைவரையும் பரஸ்பரம் மதிக்கிறோம். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !