உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் விதி; மறுப்பது விதிவிலக்கு: மும்பை ஐகோர்ட்

ஜாமின் விதி; மறுப்பது விதிவிலக்கு: மும்பை ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஜாமின் தொடர்பான வழக்கில், 'ஜாமின் என்பது விதி; ஜாமின் மறுப்பது விதிவிலக்கு. விசாரணையின்றி நீண்ட நாட்களுக்கு கைதியை சிறையில் அடைத்து வைப்பது விசாரணைக்கு முந்தைய தண்டனைக்கு சமம்' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 2018ல், உடன் பிறந்த சகோதரரை கொன்ற வழக்கில், விகாஸ் பாட்டீல் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கேட்டு விகாஸ் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வு அவருக்கு ஜாமின் அளித்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:இப்போதெல்லாம் வழக்கு விசாரணை முடிய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மறுபுறம் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. இதில் சமநிலையை நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.விசாரணை முடியவில்லை என்ற காரணத்திற்காக, கைதியை நீண்ட நாள் சிறையில் வைத்திருப்பது விரைவான நீதி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அவர்களது அரசியலமைப்பு உரிமையை பாதிக்கிறது.ஜாமின் என்பது விதி; ஜாமின் மறுப்பது விதிவிலக்கு. விசாரணையின்றி நீண்ட நாட்களுக்கு ஒருவரை சிறையில் அடைத்து வைப்பது விசாரணைக்கு முன்பே தண்டனை வழங்கியதற்கு சமம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

theruvasagan
மே 12, 2025 17:45

இப்போதல்ல எப்போதுமே வழக்குகள் விசாரணை முடிய நீண்டகாலம் ஆகிறது. அதற்கு யார் காரணம். ஏகப்பட்ட வாய்தா தள்ளிவைப்பு இவைகளை அனுமதிப்பதற்கு யார் காரணம். இவைகளை எங்களுக்கு சொன்னால் தேவலை மைலார்ட்.


Kasimani Baskaran
மே 12, 2025 05:58

விசாரணை, வாய்தா போன்ற பெயர்களின் அர்த்தமில்லாமல் தண்டனை கொடுக்காமல் ஒருவரை இழுத்தடிப்பதும் நீதியல்ல. தண்டனை கொடுக்க முகாந்திரம் இருந்தால் உடனே கொடுத்து விட்டு விசாரணையை தொடரலாம். முன்னாள் மேதகு செபாவையே உதாரணமாக சொல்லலாம். பலரிடம் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி இருக்கிறார். அனைவரையும் விசாரித்தப்பின்னர்தான் தண்டனை என்றால் 50 வருடம் கூட விசாரணை நடக்கும். ஒருவரிடம் பணம் வாங்கியிருந்தாலே தண்டனை கொடுத்து இருக்க வேண்டும் - ஆனால் விசாரணையே குற்றவாளியை மந்திரியாக வைத்துக்கொண்டு நடக்கிறது. நீதித்துறையே நீதியை குழிதோண்டிப்புதைக்க முயல்வது நாடு நாசமாகப் போகிறது என்பதற்கான அடையாளம். செல்லரித்துப்போன நீதித்துறையும், விலை போன ஊடகமும், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் வாக்காளர்களும் நிச்சயம் இந்தியாவின் சாபக்கேடு.


சமீபத்திய செய்தி