உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை விட்டு விலகிடுங்க; இல்லன்னா...: பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல்!

காங்கிரசை விட்டு விலகிடுங்க; இல்லன்னா...: பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மல்யுத்த வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பஜ்ரங் புனியாவிற்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காங்கிரசின் அழைப்பின் பேரில், ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 30, அதே மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத், 30, இருவரும் இணைந்தனர். இதையடுத்து, அகில இந்திய கிசான் காங்கிரசின் செயல் தலைவராக பஜ்ரங் புனியாவிற்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. வினேஷ் போகத் தேர்தலில் களம் இறங்குகிறார்.

கொலை மிரட்டல்

மல்யுத்த வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பஜ்ரங் புனியாவிற்கு, இரண்டே நாட்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல்வந்துள்ளது. வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது.

அதில் கூறி இருப்பதாவது:

காங்கிரஸை விட்டு விலகி விடுங்கள். இல்லையென்றால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எங்களை எதிர்கொள்ள நேரிடும். இது எங்களின் இறுதிச் செய்தி. நாங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு முன் உங்களுக்குக் காண்பிப்போம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யலாம், ஆனால் இது எங்களின் முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பஜ்ரங் புனியா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது என சோனிபட் எஸ்பி ரவீந்திர சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 11:11

பிக்காளி பய கோல்மால் பார்ட்டிலேயே இருக்கட்டும். வெளியேறும் படி உள்ளே உள்ளவர்கள் தான் மிரட்ட முடியும்


rasaa
செப் 09, 2024 09:57

காங்கிரஸுக்கு இதெல்லாம் கைவந்த கலை.


Shekar
செப் 09, 2024 09:28

பரவாயில்லையே, இந்த விளம்பர யுக்தி ஓவர் நைட்ல ஒபாமா ரேஞ்சுக்கு கொண்டுபோயிரும் போலிருக்கே


veeramani hariharan
செப் 09, 2024 08:59

Now started playing dirty politics like his party


Indian
செப் 09, 2024 08:55

எதாவது சங்கி யா இருக்கும் ??


Barakat Ali
செப் 09, 2024 08:29

இது பஜ்ரங் புனியாவே ஆடும் நாடகம் ...... மதுரையில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்டாலினை கத்தியால் குத்த ஒருவர் பாய்ந்தாராம் ... அப்போதும் அவரை மடக்கிப்பிடிக்க முடியலை .... அவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .....


சிவா அருவங்காடு
செப் 09, 2024 08:19

வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் வந்தால் அதை. ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டு இருப்பாங்களே.


karunamoorthi Karuna
செப் 09, 2024 08:05

ஜார்ஜ் சோரஸ் போன் செய்து மிரட்டி இருப்பான்


N.Purushothaman
செப் 09, 2024 07:57

கவலைப்படாதீங்க ....பப்பு ஜி பாத்துக்குவாரு ...


Sampath Kumar
செப் 09, 2024 07:46

ரொம்ப யோக்கிய சிகாமணி மாதிரி ஏலி வேஷம் போடு மக்களை முட்டாள்களாகி அதில் குளிர்காலம் அய்யோக்கிய கும்பல் இவர்கள் டுத்தவர்களி பார்த்து நகல் அடிப்பது தான்கொடுமை போவியா


சமீபத்திய செய்தி