உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.அவகாசம்இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து, துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gajageswari
ஜூன் 04, 2025 12:41

இதில் இந்த அளவு அக்கறை காட்டும் அரசு. ஏன் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மேல் அக்கறை செலுத்த கூடாது


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 04:00

மேல் முறையீடு, கீழ் முறையீடு, பின் முறையீடு, முன் முறையீடு என்று என்னதான் வித்தை செய்தாலும் ஒன்றும் நடக்காது - ஏனென்றால் நாடு முழுவதும் கவர்னர்தான் துணைவேந்தர் என்ற நடைமுறை தொடர்கிறது - அதாவது யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு நிதியளிக்கிறது. மாநில முதல்வர்கள் வேந்தராக இருக்கும் பட்சத்தில் அடிப்படை டாய்லட் பயிற்சி கூட பெரியார்தான் அறிமுகப்படுத்தினார் என்று கதை விடுவார்கள்.


M Ramachandran
ஜூன் 03, 2025 23:45

இனிமேல் நீதிபதிகளை விலைக்கு வாங்க முடியாது சாயம் வெளுத்துடுச்சி.


GMM
ஜூன் 03, 2025 23:27

துணை வேந்தர் நியமிக்கும் வேந்தர் அதிகாரத்தை தமிழக அரசு எடுத்து மசோதா தாக்கல் செய்ய முடியாது. மாநில கவர்னர் அதிகாரம், தமிழக மாநில அதிகாரம் பிரிக்க முடியாது. கவர்னரை எதிர்த்து மாநில ஆளும் கட்சி மாநில அரசு சார்பாக வழக்கு போட முடியாது. நாளை கொலிஜியம் நீதிபதி நியமிக்கும் அதிகாரத்தை எடுக்க மசோதா தாக்கல் செய்ய முடியும்.? மேல் முறையீடு விசாரிக்க ஏற்றது அல்ல. தள்ளுபடி செய்யும் போது சட்ட சிக்கல் குறையும். வக்கீல் தவறான வாத அடிப்படையில் சட்டத்திற்கு வெளியே எடுக்கும் முடிவை நீதிபதி தவிர்க்க வேண்டும்.


dhanavel
ஜூன் 03, 2025 22:29

Dmk mass


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை