உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் அமைப்புக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு

ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் அமைப்புக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கம் ஜெருசலேத்தில் 1953ம் உருவானது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட காரணத்தால், பல்வேறு நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பை இந்தியாவிலும் தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5rv82y7g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற அமைப்பானது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஜிகாத்தை பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவதும், ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அதன் செயல்பாடு இருப்பதும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இளைஞர்களை தவறாக வழிநடத்துவதும், தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த அமைப்பு பயங்கரவாதத்தை பரப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Rajan
அக் 11, 2024 01:23

தி மு க தேச துரோகிகளுக்கு இது பிடிக்காதே. முப்பது சதவீதம் வோட்டு. ஆனால் ஸ்ரீ லங்காவில் ஒருகாலத்தில் ராஜா பக்ஷ ஆட்சி போல் இருந்தது போல் இன்று தமிநாடு ஆட்சி. வேண்டியது seythukolvaarkal.


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 20:35

அப்பன் பெயரை மாற்றுவது போல இயக்கத்தின் பெயரையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள் அந்த தீவிரவாதிகள்


சமீபத்திய செய்தி