வங்கதேசத்தினர் கைது
புதுடில்லி:திருநங்கை போல் வேட மிட்டு இருந்த, ஐந்து பேர் உட்பட, 18 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.குடிசைப் பகுதிகள் மற்றும் சாலையோரத்தில் தங்கியிருந்தவர்களிடம் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருநங்கை போல வேடமிட்டு இருந்த, ஐந்து பேர் உட்பட, 18 வங்கதேசத்தினரை கைது செய்தனர். இவர்கள், வங்கதேசத்தின் டாக்கா, குல்னா காசிபூர் மற்றும் அஷ்ரபாபாத் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் சட்டவிரோதமாக டில்லிக்குள் நுழைந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, ஏழு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாடு கடத்தும் நடைமுறைகள் துவக்கப்பட்டுள்ளன.