உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வங்கி ஏஜென்சி ஊழியர் சுட்டுக்கொலை; கர்நாடகாவில் பயங்கரம்

ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வங்கி ஏஜென்சி ஊழியர் சுட்டுக்கொலை; கர்நாடகாவில் பயங்கரம்

தார்வாட்: கர்நாடகாவில் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வங்கி ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அதன்பிறகு, கொள்ளையர்கள் பணப்பெட்டியை பைக்கில் வைத்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தார்வாட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்புவதற்காக வங்கி ஏஜென்சி ஊழியர்கள் சென்றனர். வாகனத்தில் இருந்து இறங்கி, ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப, பணப்பெட்டியை எடுக்க முயன்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hqnbdtyx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் வங்கி ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று, பைக்கில் வைத்து எடுத்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Aravind
ஜன 17, 2025 12:15

, ஐயோ பாவம்


Aravind
ஜன 17, 2025 12:05

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறதா?, என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்துவருகிறது. அரசு உயரதிகாரிகளும், அனைத்து நிலையிலுள்ள ஊழியர்களும், மிகவும் அலட்சியமாகவும், பொது மக்களை கவுரவமாக நடத்தாமல், மரியாதை கொடுக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக காவல்துறை முற்றிலும் செயலிழந்த நிலையில் உள்ளது. அதிகார துஷ்பிரயோகம், லஞ்சலாவன்னியம், மக்கள் விரோதப் போக்கு, பொது மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறாமல் தவித்து வருகிறார்கள். ஆக மொத்தத்தில் இந்த மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கு பயன்படாத, சவங்கள் செய்யும் ஆட்சியாக உள்ளது. கேடுகெட்ட காங்கிரஸ் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும்


தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 20:06

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டஒழுங்கை கடைபிடிக்க முடிவதில்லை. கலைப்பது தான் சரியான தீர்வு.


தமிழ்வேள்
ஜன 16, 2025 19:45

மர்ம நபர்கள்....யார்? மார்க்க மூர்க்க பந்துக்களா? அப்படியானால் அடித்ததில் ஒரு பகுதி இந்திரா பவனுக்கு கப்பமாக விடும்.. காங்கிரஸ் ஆட்சி வேறு.... போலீஸ் தேடோ தேடு என்று ஒரே இடத்தில் தேடுவார்கள்.. பந்துக்கள் பாகிஸ்தானுக்கு எஸ்.. வாங்கி விடுவார்கள்... சப்பைக்கட்டு கட்ட வின்சியார் கிளம்பி விடுவார்....


Rajan A
ஜன 16, 2025 18:16

எஸ்பிஐயை குறி பார்த்து சம்பவம் செய்கிறார்கள். என்ன பகையோ? மினிமம் பாலன்ஸ் சார்ஜலயே கோடிகளை கொள்ளை அடித்து பணம் சேர்க்கும் வங்கி


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 16, 2025 18:03

ஏடிஎம்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க வேண்டும். வங்கி கிளைகள், பிரபல கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டும் ஏடிஎம் வைத்தால் போதும். பெரும்பாலும் இப்போது மக்கள் யூபிஐக்கு மாறிவிட்டார்கள்.


manogyanathan
ஜன 16, 2025 17:31

நம்ப முடியவில்லை. பட்ட பகலிலேயா. சட்டம் ஒழுங்கு அந்த நிலையில் உள்ளது.


R S BALA
ஜன 16, 2025 16:01

இந்தியாவில் இது போல சம்பவம் எங்கு நடந்தாலும் அது ஒரு சதவீதம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த அப்பாவி உயிர்க்கு செய்யும் அஞ்சலி எதுவெனில் அது உண்மை குற்றவாளி இது போல வீதியில் ஓடவிட்டு கொல்லப்படவேண்டும்.


MARUTHU PANDIAR
ஜன 16, 2025 15:42

அங்கு காங்கிரஸ் அராஜக ஆட்சி நடக்குது ...நோ நடவடிக்கை ++++அதுவும் "மர்ம நபர்களை இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்+++அது என்ன உ.பி.யா என்ன? தமிழகத்தின் அண்டை மாநிலம் தான்.


Nethiadi
ஜன 16, 2025 15:40

கர்நாடக வில் எப்பொழுது BJP ஆட்சி வந்ததோ அன்றைக்கே சட்டஒழுங்குக்கு வேலை ஏன்லை. ஏன் என்றால் சங்கீகள் டிசைன் அப்படி.


Laddoo
ஜன 16, 2025 17:01

கோமாவிலிருந்து ஏஞ்சி வன்டியா? எம் ஜி ஆர் செத்துப் போயிட்டார் தெரியுமா? கருணாநிதி பையன் பேரனெல்லாம் மினிஸ்டர் ஆயிட்டாங்க தெரியுமா? போய் கம்பளி போதிக்கினு தூங்கு போ


பெரிய ராசு
ஜன 17, 2025 00:16

இவன் மார்க்க மூர்க்கன் இவனிடம் என்ன எதிர்பார்க்க முடியம் இஸ்ரேல் பாணிதான் சரி


புதிய வீடியோ