உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி துணிகரம்

வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி துணிகரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடா: வாடிக்கையாளரின் பிக்சட் டெபாசிட் பணத்தை, அவர்களுக்கு தெரியாமல் திருடி பங்குச்சந்தையில் முதலீடு செய்து மோசடி செய்த பெண் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.பொதுவாக, மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் வங்கிகளில் பணம் போட்டு வைப்பதையே மிகவும் பாதுகாப்பானதாக கருதி வருகின்றனர். இதனடிப்படையில் பலர் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகளின் செயலால் வங்கிகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் ராஜஸ்தானின் கோடா நகரில் செயல்படும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கிளையின் அதிகாரியாக(Relationship Manager) பணிபுரிபவர் சாக்ஷி குப்தா. இவர், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 41 வாடிக்கையாளர்களின் 101 பிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ரூ.4.58 கோடி வரை பணம் திருடி உள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த திருட்டு தெரியக்கூடாது என்பதற்காக, வங்கியில் அவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணையும் மாற்றினார். இதனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த குறுஞ்செய்தியும் செல்லவில்லை.ஆனால், பங்குச்சந்தையில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், திருடிய பணத்தை அவரால் வங்கிக்கணக்கில் மீண்டும் செலுத்த முடியவில்லை. வாடிக்கையாளர் ஒருவர் தேவைக்காக பணத்தை எடுக்க வங்கிக்கிளையை அணுகி உள்ளார். அப்போது அவரது கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.இதனையடுத்து நடந்த விசாரணையில் சாக்ஷி குப்தாவின் திருட்டு அம்பலமானது. இதனையடுத்து சகோதரி திருமணத்தில் இருந்த சாக்ஷி குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sundarkovilpatti
ஜூன் 07, 2025 06:29

குப்தா என்றால் வியாபாரம் செய்யக்கூடிய சாதியைச் சேர்ந்தவர்கள் வட இந்தியர்கள் இவர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் கலப்படம் செய்து நல்லவர்கள் மற்றும் ஏகப்பட்ட திருட்டுத்தனம் செய்யக் கூடிய வல்லவர்கள்


அப்பாவி
ஜூன் 06, 2025 11:19

உங்கள் பணத்துக்கு, நகைக்கு பேங்கில் பாதுகாப்பு இல்லை. எல்லாரு இந்திய துருட்டு கூட்டம் தான்


Anbu
ஜூன் 06, 2025 10:30

ஃபியூச்சர்ஸ் / ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் செய்திருப்பார் ....


N Annamalai
ஜூன் 06, 2025 07:13

ஐசிசிஐ வங்கி மிக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நம்பி பணம் போடுகிறார்கள். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .


Mani . V
ஜூன் 06, 2025 05:31

யார் சொன்னது ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் என்று? சரி இந்த நாயையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்? எது நன்கு கவனித்து விட்டாரா?


Kasimani Baskaran
ஜூன் 06, 2025 04:02

தொலைபேசி எண்ணை மாற்றும்பொழுது ஏதாவது ஒரு வகையில் வாடிக்கையாளரின் சம்மதம் வாங்கவேண்டும். ஆகவே பலர் கூட்டாக சதியில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது.


J.Isaac
ஜூன் 06, 2025 19:40

கோடிக்கணக்கான ஆதார் தரவுகள் திருட்டு போனது எப்படி? சமீபத்தில் கோவையில் ரவுடி ராடு மூர்த்தி கைது செய்யப்பட்டது தெரியுமா? அனைத்து துறைகளும் மத்திய, மாநிலசம்பந்தம் இல்லாமல் 4 கோடிக்கு நூற்பு ஆலை ராஜபாளையத்தில் வாங்க முடியுமா?


Iyer
ஜூன் 06, 2025 02:19

தனியார் துறையில் பணியாற்றி - PENSION இல்லது RETIRE ஆவோர் பெரும்பாலும் FD வட்டியை நம்பியே முதுமையை கழிக்கின்றனர். இது போன்ற குற்றவாளிகளை - அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து PAROLE இல்லது LIFE IMPRISONMENT கொடுக்கணும்


Anantharaman Srinivasan
ஜூன் 05, 2025 23:48

Private banks always danger.


Ganapathy
ஜூன் 06, 2025 01:05

தமிழகத்தில் இந்தியன் வங்கி மேலாளர் கோபால கிருஷ்ணன் செய்த இதேபோன்ற ஊழல் நியாபகம் வருதா? கடைசியாக தப்பிக்க தனது யாதவர் ஜாதி சங்கத்தில் புகலிடம் தேடியதும் நியாபகம் வருதே.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 06, 2025 05:49

கணபதி அவர்களே, அதே கோ கி அவர்கள் ப சி யின் ஜனநாயக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஞானஸ்தானம் பெற்று புனிதமடைந்ததை சொல்லாமல் விட்டு விட்டீர்களே


R SRINIVASAN
ஜூன் 06, 2025 07:11

எந்த வங்கியும் ஆபத்தானது இல்லை. என்னுடைய இன்னொரு சந்தேகம் ஒவ்வொரு வங்கியிலும் RBIA வங்கியின் இன்டெர்னல் ஆடிட், கிரெடிட் ஆடிட், STATUTORY ஆடிட், CREDIT COMPLIANCE ஆடிட், CONCURRENT ஆடிட், போன்ற தணிக்கைகள் நடை பெறுகின்றன. இவர்கள் எல்லாம் தூங்குகிறார்களா ?


ஷாலினி
ஜூன் 05, 2025 22:31

இவரைப் போன்ற அதிகாரிகளால் வங்கிகளுக்கு கேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை