உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களே தெரிஞ்சுக்கோங்க... மார்ச்சில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

மக்களே தெரிஞ்சுக்கோங்க... மார்ச்சில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

புதுடில்லி: மார்ச் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழாக்களுக்கு அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் தான் வருகிறது. மார்ச் 2- (ஞாயிறு) - வார விடுமுறைமார்ச் 7 - (வெள்ளி) - சாப்சர் குட் - மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறைமார்ச் 8 - (2வது சனிக்கிழமை) - வார விடுமுறைமார்ச் 9 - (ஞாயிறு) - வார விடுமுறைமார்ச் 13 - (வியாழன்) -ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை - உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கேரளாமார்ச் 14 - (வெள்ளி) - ஹோலி, திரிபுர, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறைமார்ச் 15 - (சனிக்கிழமை) -அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறைமார்ச் 16 - (ஞாயிறு) - பொதுவிடுமுறைமார்ச் 22 (4வது சனிக்கிழமை) பிஹார் திவாஸ்மார்ச் 23 - (ஞாயிறு) - பொதுவிடுமுறைமார்ச் 27 (வியாழன்) -ஷதப் இ கத்ர் - ஜம்மு உள்ளூர் விடுமுறைமார்ச் 28 - (வெள்ளி) ஜூமத் உள் விதா - ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறைமார்ச் 30 - (ஞாயிறு) - பொதுவிடுமுறைமார்ச் 31 - ரம்ஜான் விடுமுறைஇதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R S BALA
பிப் 28, 2025 11:25

தமிழ்நாட்டுக்கு உள்ள விடுமுறை லிஸ்ட் தனியா போடுங்க.. குழப்பாதீங்க.


baala
மார் 18, 2025 09:42

குழப்பினால்தானே அறிவாளி என்று நம்புவார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:09

விடுமுறை, வட்டி போன்றவை தனியார் வங்கிகளிலும் இதே நிலைதான் .... மாநிலங்களுக்கிடையே உள்ளூர் விடுமுறைகளில் சற்றே மாற்றங்கள் இருந்தாலும் வருடத்திற்கு இத்தனை விடுமுறை என்பது மாற வாய்ப்பில்லை ..... இன்னும் விடுமுறைகளைக் கூட்டி, சம்பளத்தைக் கூட்டினாலும் போராட்டம் செய்யத்தான் போகிறார்கள் .... கடனுக்கான வட்டியைக் கூட்டும் அளவுக்கு முதலீட்டுக்கான வட்டி கூடுவதில்லை ..... மக்கள் விரோத வங்கிகள் .....


M L SRINIVASAN
பிப் 28, 2025 10:37

அகில உலகை பார்க்கும்போது 23 நாட்கள் வங்கிகள் விடுமுறை


N Annamalai
பிப் 28, 2025 09:45

எல்லா மாநிலங்களை சேர்த்தால் முப்பது நாள் விடுமுறை வரும் .தலைப்பு தவறு


baala
பிப் 28, 2025 10:17

அப்படி என்றால் தானே பரபரப்புடன் படிப்பார்கள். நேர்மை வேண்டும் இல்லையா அதுதான் இப்படி


சமீபத்திய செய்தி