உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுக்கூடங்களுக்கு ‘டெண்டர்’ ஒப்புதல்

மதுக்கூடங்களுக்கு ‘டெண்டர்’ ஒப்புதல்

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இயக்குனர் குழுவில் உள்ள, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர். மது கடைகளை ஒட்டிய காலியிடத்தில், தின்பண்டங்கள் விற்பதற்கான, ‘பார்’ எனப்படும் மதுக்கூடங்களை நடத்த, தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதற்கு, ‘டெண்டர்’ கோர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மது கடை ஊழியர்கள் நலன் உட்பட பல பணிகளுக்கும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !