உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மம்தா மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு

முதல்வர் மம்தா மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ், கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பேசும் போது, ‛‛ சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் '' எனக்கூறியிருந்தார். இதனை திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வழிமொழிந்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த ஆனந்த போஸ், மக்கள் பிரதிநிதிகள் தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பரப்பக்கூடாது எனக்கூறியிருந்தார்.இந்நிலையில், இந்த கருத்துக்காக மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajendra kumar
ஜூன் 30, 2024 13:36

பங்களாதேஷ் & ரோகிங்கியா ஆதரவோடு மம்தா இருப்பதால் இந்துக்கள், சட்டம் ஒழுங்கு, மத்திய அரசு பற்றிய பயம் அவருக்கு தேவையில்லை. பெரும்பான்மை இந்து..கள் சுயநலத்தோடு, நாட்டு நடப்பு தெரியாமல் இருப்பதால் சிறுபான்மை பெரும்பான்மையை ஆள்வது நம் நாட்டில் மட்டுமே.


venugopal s
ஜூன் 29, 2024 19:50

எப்படி இருந்த ஆளுநர் பதவி இப்படி ஆகி விட்டதே!


M Ramachandran
ஜூன் 29, 2024 19:20

மம்தாவின் கடையிசி அத்தியாயம்.


vadivelu
ஜூன் 29, 2024 14:05

வரை முறை இன்றி மம்தா ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது வீண் பழி சுமற்றுவது இப்போது சில தலைவர்களின் நடை முரை வழக்கம் .


GMM
ஜூன் 29, 2024 13:09

மம்தா மீது அவதூறு வழக்கு தொடர்வது தவறான முன்னுதாரணம். கவர்னர் பதவி, உயர் நீதிமன்ற நீதிபதி அதிகாரத்திற்கு மேல். மாநில முதல் குடிமகன். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போலீசார், தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


rsudarsan lic
ஜூன் 29, 2024 12:25

ரெண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சா நாட்டுக்கு நல்லது. அட்லீஸ்ட் கேஸ் நடக்குற போது ரெண்டு பேரையும் நேர்ல வரவழைத்து அட்வைஸ் பண்ணுங்க நீதிபதி அவர்களே


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 11:32

இதே போல தமிழக அரசியல்வாதிகள் மீது தமிழக கவர்னர் ரவி வழக்குதொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ