உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள்; டாப் 10 பட்டியல் இதோ!

இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள்; டாப் 10 பட்டியல் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில் முதலிடத்தில் இருந்த சென்னை, தற்போது இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், 2024ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றின் அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4w4pxtv7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில் அவதார் குழுமம் நாடு முழுவதும் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. அதன் படி வெளியிடப்பட்ட டாப் 10 நகரங்கள் பட்டியல் பின்வருமாறு:1. பெங்களூரு, கர்நாடகா2. சென்னை, தமிழகம்3. மும்பை, மஹாராஷ்டிரா4. ஹைதராபாத், தெலுங்கானா5. புனே, மஹாராஷ்டிரா6. கோல்கட்டா, மேற்கு வங்கம்7. ஆமதாபாத், குஜராத்8. புதுடில்லி9. குருகிராம், ஹரியானா10. கோவை, தமிழகம்இது குறித்து அவதார் குழுமத்தின் தலைவர் சவுந்தர்யா ராஜேஷ் கூறியதாவது: 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடு என்ற நமது கனவை நனவாக்க, இந்திய பெண்கள் ஆண்களுக்கு இணையாக வெற்றிபெற வேண்டும். பாதுகாப்பான தெருக்கள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறப்பாக இருக்க வேண்டும். பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். பெண்கள் தலைமையிலான திட்டங்களில் அதிக முதலீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் 2023ம் ஆண்டில் சென்னை முதலிடத்தில் இருந்தது. அரசு தரப்பில் அதை பெருமிதமாக அவ்வப்போது குறிப்பிட்டும் வந்தனர். தற்போது சென்னையை பின்தள்ளி பெங்களூரு முதலிடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில், வாழ்க்கைத் தரம் குறித்த தரவரிசையில், நாட்டின் முதலிடத்தில் கோவை நகரமும், இரண்டாம் இடத்தில் புனே நகரமும், மூன்றாம் இடத்தில் சென்னையும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

xyzabc
ஜன 16, 2025 12:07

தமிழகத்தில் வாரம் ஒரு பாலியல் தொல்லை. திராவிட மாடாலின் ரகசியம்


M Kadorvelu
ஜன 10, 2025 11:59

இது குருட்டுத்தனமான உண்மை தன்மை இல்லாத கருத்து கணிப்பு.


M Kadorvelu
ஜன 10, 2025 11:55

குருட்டு தனமான உண்மை தன்மை இல்லாத கருத்து.


Laddoo
ஜன 10, 2025 10:55

சென்னைல மிகவும் பாதுகாப்பன வேடம் அண்ணா பல்கலை வளாகம்தான். வேணும்னா த்ரவிஷ நிர்வாகி ஞானசேகரன கேளுங்க.


VENKATASUBRAMANIAN
ஜன 09, 2025 18:30

இன்றும் பெங்களூரில் இரவு தனியாக பெண்கள் பாதுகாப்பாக வரமுடியும். ஏதோ ஒன்று இரண்டு நிகழ்வுகள் இருக்கலாம். ஆனால் அதுவும் தனிப்பட்ட காரணங்களாகவே உள்ளது. ஏனெனில் பெங்களூர் தற்போது மதுரை போல் தூங்கா நகரம் ஆகிவிட்டது.


Sampath Kumar
ஜன 09, 2025 16:49

2 அம இடம் ஓகே அது ன்ன பெங்களூர் ஆம் இடமா ? அங்கு நடந்த கற்பழிப்பு சமாசாரங்கள் i.T கம்பெனிகளி கதிகலங்க வாய்த்த சம்பவம் மறக்க முடியமா ?? இது வேண்டும் என்று புன்னைய பட்ட கொய்பல்ஸ்களின் பொய் பிரச்சாரமே


Ramesh Sargam
ஜன 09, 2025 13:46

அவதார் குழுமத்தினர் திமுக ரவுடிகளால் மிரட்டப்பட்டிருக்கலாம்.


Kundalakesi
ஜன 09, 2025 13:44

என்னது வாழ்க்கை தரத்தில் கோவை இரண்டாம் இடமா. நான் 25 வருடமாக கோவையில் தான் உள்ளேன். நிலைமை ரொம்ப மோசமாகத்தான் உள்ளது. மோசமான சாலை, தூசி, சாக்கடை நாற்றம், ஊர்பட்ட வண்டிகள். சாலைகளை எளிதாக கடக்க முடியாத அளவிற்கு வாகன பெருக்கம்


Barakat Ali
ஜன 09, 2025 12:27

பெண்கள் பாதுகாப்பு ஓரளவு அவர்கள் கையில்தான் உள்ளது .... அதற்குப் பதிலாக சிறுமிகள் வன்புணர்வு எங்கே அதிகம் என்னும் ஆய்வினை நடத்தியிருக்கலாம் .... FOSCO சட்டத்தின் படி எத்தனை வழக்குகள் பதியப்பட்டு, எத்தனை பேர் விசாரிக்கப்பட்டு, எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர் என்பதை ஆய்வுக்கு எடுத்த்துக்கொள்ளலாம் ... மாபெரும் சமூக அவலம் இது ....


Barakat Ali
ஜன 09, 2025 12:43

தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்... Protection of Children from Sexual Offenses POCSO Act, 2012


Krishnamurthy Venkatesan
ஜன 09, 2025 12:17

130 கோடிக்கும் அதிகம் உள்ள நாட்டில் 65 கோடிக்கும் பெண்கள் அதிகம் உள்ள நாட்டில் 200க்கும் மேற்பட்ட நகரங்களடங்கிய நாட்டில் வெறும் 6120 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்களாம். கேலி செய்கிறார்கள் இந்த கணக்கெடுப்பாளர்கள். simply ignore.


Ganapathy Subramanian
ஜன 09, 2025 12:55

1672 தான், 6120 இல்லை.


சமீபத்திய செய்தி